» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஷின்ஜோ அபே நினைவு அஞ்சலி: டோக்கியோ நகரை சென்றடைந்தார் பிரதமர் மோடி!

செவ்வாய் 27, செப்டம்பர் 2022 10:38:38 AM (IST)



ஷின்ஜோ அபே நினைவு அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து ஜப்பான் புறப்பட்டு டோக்கியோ நகரை சென்றடைந்துள்ளார். 

ஜப்பான் நாட்டில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்தவர் ஷின்ஜோ அபே (67). அங்கு நரா என்ற இடத்தில் கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி நடந்த தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் டெட்சுய யமகாமி என்பவரால் சுட்டு கொல்லப்பட்டார். இது அந்த நாட்டை உலுக்கியது. ஷின்ஜோ அபேயின் இறுதிச்சடங்கு 12-ந்தேதி டோக்கியோவில் நடந்தது. அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. 

இந்நிலையில் ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சி, அந்த நாட்டின் அரசு சார்பில் இன்று டோக்கியோவில் நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்க இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடப்பட்டு உள்ளது. ஜப்பானின் அழைப்பை ஏற்று, ஷின்ஜோ அபே நினைவு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து ஜப்பான் புறப்பட்டு டோக்கியோ நகரை சென்றடைந்துள்ளார். ஜப்பான் சென்றடைந்த பிரதமர் மோடியை ஜப்பானிய பிரதமர் புமியோ கிஷிடா முறைப்படி வரவேற்றார். இதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களின் இருதரப்பு சந்திப்பு நடந்தது. 

இதுபற்றி பிரதமர் மோடி கூறும்போது, துயரம் நிறைந்த இந்த நேரத்தில் எங்களது இன்றைய சந்திப்பு நடைபெறுகிறது. கடந்த முறை நான் ஜப்பான் நாட்டிற்கு வந்தபோது, முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்ஜோ அபேவுடன் நீண்டநேரம் உரையாடினேன். அவரை இந்தியா இழந்துள்ளது. அவரையும், ஜப்பானையும் நாங்கள் நினைவுகூர்கிறோம் என்று தெரிவித்து உள்ளார். இந்த பயணத்தில் பிரதமர் மோடி, ஷின்ஜோ அபேயின் மனைவியை சந்தித்து பேசுகிறார். அப்போது இந்திய மக்களின் சார்பில் அவர் இரங்கலை தெரிவித்து கொள்கிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory