» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 நாடுகள் தடை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்!

திங்கள் 27, ஜூன் 2022 11:58:36 AM (IST)

ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதிப்பதற்கான அறிவிப்பை ஜி-7 நாடுகள் வெளியிடும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.

அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், பிரிட்டன் ஆகிய 7 நாடுகள் உறுப்பினர்களாக ஜி-7 அமைப்பின் 48-வது உச்சி மாநாடு ஜெர்மனியின் ஸ்லாஸ் எல்மவ் ஓட்டலில் நேற்று தொடங்கி 28-ம் தேதிவரை நடக்கிறது. இதில் இந்தியா உட்பட சில நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றன.

முதல் நாளான நேற்று, ரஷ்யா ஊடுருவலால் ஏற்பட்ட தாக்கங்கள், எரிசக்தி விநியோகத்தை பாதுகாப்பது, பணவீக்கத்தை சமாளிப்பது குறித்து ஜி-7 நாடுகள் ஆலோசித்தன. உக்ரைன் மீது போர் தொடுத்ததற்காக ரஷ்யாவை தண்டிக்கும் நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன.

‘‘எரிசக்திக்கு அடுத்தபடியாக, ரஷ்யாவின் இரண்டாவது பெரிய ஏற்றுமதியாக தங்கம் உள்ளது. இதனால் ரஷ்யாவிடம் இருந்து தங்கம் இறக்குமதி செய்வதற்கு தடை விதித்தால் அது ரஷ்யாவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும். உலக சந்தையில் ரஷ்யாவால் பங்கேற்க முடியாது’’என அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்த முறையான அறிவிப்பு ஜி-7 உச்சிமாநாட்டில் நாளை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜி-7 உச்சிமாநாடு நேற்று தொடங்குவதற்கு முன்பாக, உக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் 2 கட்டிடங்கள் சேதம் அடைந்ததாக உக்ரைனின் கீவ் நகர மேயர் விடாலி கிலிட்ஸ்கோ தெரிவித்தார். 3 வார இடைவெளிக்குப்பின் நேற்றுமுதல் முறையாக ரஷ்யா உக்ரைன்மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham HospitalThoothukudi Business Directory