» செய்திகள் - விளையாட்டு » உலகம்
ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 250 பேர் பலி - பாகிஸ்தானிலும் 20பேர் உயிரிழப்பு!!
புதன் 22, ஜூன் 2022 5:06:57 PM (IST)

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 250 பேர் உயிரிழந்தனர். இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
கிழக்கு ஆப்கானிஸ்தான், அதனை ஒட்டிய பாகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுக் கோளில் 6.1 ஆக பதிவாகி உள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் தென் கிழக்கே உள்ள கோஸ்ட் நகரில் இருந்து 44 கிமீ தொலைவில் 51 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலும் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட சில பகுதிகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளதாக தலிபான் நிர்வாகத்தின் இயற்கை பேரிடர் அமைச்சகத்தின் தலைவர் முகமது நாசிம் ஹக்கானி அதிகாரப்பூர்வ தகவலை அறிவித்துள்ளார். இந்த நிலநடுக்கத்தால் பக்டிகா மாகாணத்தில் மட்டும் 100 பேர் இறந்த நிலையில், 250 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோஸ்ட், நங்கர்ஹார் மாகாணங்களிலும் நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் பலர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலநடுக்கத்தால் பாகிஸ்தானிலும் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ள நிலையில், நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதாக இந்தியா உள்ளிட்ட 5 நட்பு நாடுகள் உறுதிமொழி
புதன் 29, ஜூன் 2022 8:35:08 AM (IST)

சுற்றுச்சூழல் திட்டங்களை நடைமுறைப்படுத்த இந்தியா உறுதி: ஜி7 மாநாட்டில் பிரதமர் உரை
செவ்வாய் 28, ஜூன் 2022 8:33:02 AM (IST)

ரஷ்யாவிலிருந்து தங்கம் இறக்குமதி செய்ய ஜி-7 நாடுகள் தடை: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தகவல்!
திங்கள் 27, ஜூன் 2022 11:58:36 AM (IST)

பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டல்: மும்பை தாக்குதல் குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் சிறை!
சனி 25, ஜூன் 2022 10:23:31 AM (IST)

ஆப்கன் நிலநடுக்கத்தில் உயிரிழப்பு 1,100ஆக உயர்வு: 1,600 பேர் படுகாயம்
வெள்ளி 24, ஜூன் 2022 12:54:23 PM (IST)

உலகம் முழுவதும் குரங்குஅம்மை பாதிப்பு அதிகரிப்பு : பொதுசுகாதார அவசரநிலை அறிவிப்பு!
வியாழன் 23, ஜூன் 2022 5:44:39 PM (IST)
