» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்காவில் உணவு விடுதிக்குள் அனுமதி மறுப்பு : சாலையோர கடையில் சாப்பிட்ட பிரேசில் அதிபர்!

புதன் 22, செப்டம்பர் 2021 10:53:00 AM (IST)

அமெரிக்காவில் பிரபல உணவு விடுதியில் பிரேசில் அதிபருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து அவர் சாலையோர உணவகத்தில் உணவருந்தினார்.

அமெரிக்கா சென்றுள்ள பிரேசில் அதிபர் போல்சனேரோ தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத காரணத்தினால் அமெரிக்காவில் உள்ள உணவு விடுதிக்குள் உள்ளே அனுமதி மறுக்கப்பட்டு சாலையோர உணவகத்தில் உணவருந்தும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் கலந்து கொள்ள நியூயார்க் சென்றுள்ள பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனேரோ, தன் சக மந்திரிகளுடன் சேர்ந்து இரவு நேர உணவுக்காக விடுதி ஒன்றுக்குள் நுழைந்துள்ளார்.

அப்போது அங்கு இருந்த பாதுகாவலர்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திகொண்டதற்கான சான்றிதழை கேட்டுள்ளனர். அதற்கு அவர் தடுப்பூசி இன்னும் செலுத்திக்கொள்ளவில்லை என தெரிவித்தார். இதனையடுத்து கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாததால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போல்சனேரோ உள்ளிட்ட தலைவர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டுமென  நியூயார்க் மேயர்  பில் டே பலசியோ அறிவுறுத்தி உள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Arputham Hospital








Thoothukudi Business Directory