» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் கரோனா பாதிப்பு குறைகிறது : பயண கட்டுப்பாடுகளை தளர்த்தியது அமெரிக்கா!

புதன் 21, ஜூலை 2021 5:50:51 PM (IST)

இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில் இந்தியா செல்வதற்கான பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா தளர்த்தியது.

இந்தியாவில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சத்தில் இருந்தது. தினந்தோறும் 3 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்பட்டன. இதன் காரணமாக உலக நாடுகள் பலவும் தங்கள் நாட்டு மக்கள் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தன.

அந்த வகையில் அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கடந்த மே மாதம் முதல் வாரத்தில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்வது தொடர்பான பயண அறிவுரையை வழங்கியது. அப்போது இந்தியாவில் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்ததால் 4-ம் நிலை, அதாவது இந்தியாவுக்கு செல்லவே கூடாது என்கிற பரிந்துரை வழங்கப்பட்டது. அப்போது பாகிஸ்தானுக்கும் இதே பயண பரிந்துரை வழங்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவில் தற்போது கரோனா வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்துள்ள நிலையில், இந்தியா செல்வதற்கு விதிக்கப்பட்ட பயண கட்டுப்பாடுகளை அமெரிக்கா சற்று எளிதாக்கியுள்ளது. அதாவது பயண பரிந்துரையை 4-ம் நிலையில் இருந்து 3-ம் நிலைக்கு குறைத்துள்ளது. 3-ம் நிலை என்பது இந்தியாவுக்கு செல்வதை மறுபரிசீலனை செய்யுங்கள் என்பதை குறிக்கிறது. இந்தியாவை போல பாகிஸ்தானுக்கான பயண பரிந்துரையையும் 4-ம் நிலையில் இருந்து 3-ம் நிலைக்கு குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads








Arputham Hospital




Thoothukudi Business Directory