» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தற்காலிக தடை : நியூசிலாந்து பிரதமர் அறிவிப்பு

வியாழன் 8, ஏப்ரல் 2021 10:23:18 AM (IST)கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவில் இருந்து நியூசிலாந்து நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிப்பதாகபிரதமர் ஜெசிந்தா அர்டெர்ன் அறிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 15 ஆயிரத்து 736 பேருக்குக் கரோனா தொற்று உறுதியானது. கடந்த ஆண்டைவிட கரோனா 2-வது அலையில் தொற்று வேகமாகப் பரவுகிறது. இளைஞர்கள் அதிகமான அளவில் பாதிக்கப்படுகிறார்கள் என டெல்லி லோக்நாயக் மருத்துவமனையின் இயக்குநர் மருத்துவர் சுரேஷ் குமார் தெரிவித்தார்.

2-வது அலையில் நோய்ப் பரவலின் வேகம் அதிகமாக இருக்கிறது. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் பாதிப்பும் அதிகரித்து வருவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கரோனா பாதிப்பு அதிகரிப்பதால் இங்கிருந்து வரும் பயணிகளுக்கு நியூசிலாந்து நாடு தடை விதித்துள்ளது. இந்தத் தடை உத்தரவும் வரும் 11ம் தேதி தொடங்கி 28ம் தேதி (ஏப்ரல் 28) வரை நீடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை இந்தியா வந்துள்ள நியூசிலாந்து நாட்டவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமர் ஜெசிந்தா இந்த உத்தரவு பற்றி தெரிவித்தார். மேலும், இந்த காலகட்டத்தில் அரசாங்கம் கரோனா பரவல் அபாயத்தைத் தடுப்பது குறித்து ஆராயப்பட்டு பின்னர் பயணத் தடையை விலக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் சிறப்பாகச் செயால்பட்டதன் காரணமாக சர்வதேச நாடுகளால் பாராட்டப்பட்டார். இந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையில் சிறப்பாகச் செயல்பட்டதன் காரணமாகவே தேர்தலில் ஜெசிந்தா மாபெரும் வெற்றியைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Thalir Products


Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory