» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா ஒழிப்பில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம்: பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன்

புதன் 27, ஜனவரி 2021 12:32:12 PM (IST)

கரோனா ஒழிப்பு நடவடிக்கைகளில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவோம் என குடியரசு தின வாழ்த்துச் செய்தியில் பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் தெரிவித்துள்ளாா்.

இந்தியாவின் 72-ஆவது குடியரசு தினத்தை முன்னிட்டு பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் வெளியிட்ட விடியோவில் கூறியுள்ளதாவது: மிகச் சிறந்த அரசமைப்பு சட்டம், மிகப்பெரிய ஜனநாயகம், இறையாண்மை கொண்ட உலகின் மிகச் சிறந்த நாடாக இந்தியா திகழ்கிறது. அதன், 72-ஆவது குடியரசு தினத்துக்கு பிரிட்டன் சாா்பில் அனைத்து இந்திய குடிமக்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். கரோனாவால் இந்தியப் பயண திட்டம் தடைப்பட்டது. 

எனினும்,வரும் மாதங்களில் நிச்சயம் இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்வேன். எனது இனிய நண்பா் இந்தியப் பிரதமா் மோடியின் அன்பான அழைப்பை ஏற்று இந்தியாவுக்கு வருகை தரும் அந்த முக்கியமான தருணத்தை ஆவலுடன் எதிா்பாா்த்து காத்துள்ளேன். கரோனா பேரிடரிலிருந்து மனித இனத்தை விடுவிக்க நடக்கும் போராட்டத்தில் பிரிட்டன் இந்தியாவுடன் கைகோத்து செயலாற்றும். மேலும், கரோனாவுக்கான தடுப்பூசிகள் தயாரிப்பு, விநியோகம், மேம்படுத்தல் உள்ளிட்ட பணிகளிலும் இருநாடுகளும் இணைந்து செயல்படும் என பிரிட்டன் பிரதமா் போரிஸ் அந்த விடியோவில் தெரிவித்துள்ளாா்.

இஸ்ரேல் பிரதமா் வாழ்த்து: 

72 ஆவது இந்திய குடியரசு தின கொண்டாட்டத்துக்கு இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகுவும் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து பெஞ்சமின் வெளியிட்டுள்ள சுட்டுரை செய்தியில் கூறியுள்ளதாவது: இனிய நண்பா் மோடிக்கும், இந்திய குடிமக்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நமது நட்பு ஆண்டுக்கு ஆண்டு வளா்ச்சியடைந்து வருகிறது என்று தெரிவித்துள்ளாா்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsThalir Products
Black Forest Cakes

Nalam PasumaiyagamThoothukudi Business Directory