» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய குடியரசு தினம்: இலங்கை பிரதமர் ராஜபட்ச வாழ்த்து

செவ்வாய் 26, ஜனவரி 2021 9:59:15 PM (IST)

இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு இலங்கை பிரதமர் மகிந்த ராஜபட்ச வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்திய நாட்டின் அரசமைப்புச் சட்டம் கடந்த 1950-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடைமுறைக்கு வந்தது. அதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய மக்களுக்கு இலங்கை பிரதமர் ராஜபட்ச குடியரசு தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தனது வாழ்த்து செய்தியில் அவர், " இலங்கை மக்களின் சார்பாக நான் இந்தியப் பிரதமர் மற்றும் மக்களுக்கு எனது அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியா எதிர்கொள்ளும் ஒவ்வொரு சவாலிலும் வெற்றி பெறட்டும்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக 1966-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் முறையான வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் இன்றி குடியரசு நாள் விழா அணிவகுப்பு நிகழ்ச்சிகள் தில்லியில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியேற்றி வைத்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Thalir Products


Nalam Pasumaiyagam


Black Forest Cakes



Thoothukudi Business Directory