» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிட்டனில் உருமாற்றம் அடைந்த கரோனா வைரசால் இறப்பு விகிதம் அதிகரிப்பு : போரிஸ் ஜான்சன்

சனி 23, ஜனவரி 2021 11:38:06 AM (IST)

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கரோனா வைரசால் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்த புதிய வகை கரோனா வைரஸ் உலுக்கி வருகிறது. கடந்த சில மாதங்களாக இங்கிலாந்தை உலுக்கும் புதிய வகை கரோனா வைரஸ் காரணமாக அந்நாட்டில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், மறுபுறம் வைரஸ் கோர தாண்டவம் ஆடி வருகிறது. இதனால், கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படலாம் எனவும் பரவலாக ஊகங்கள் வெளியாகின்றன. 

இந்நிலையில்,  செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பிரதமர் பிரிட்டன் போரிஸ் ஜான்சன், "தென்கிழக்கில் முதன் முதலாக அடையாளம் காணப்பட்ட புதிய வகை கரோனா வைரஸ்  அதிக அளவு இறப்பு ஏற்படுத்துவதற்கு தொடர்புடையதாக இருக்கலாம் என்பதற்கு சான்றுகள் உள்ளன” என்றார்.  

மேலும், தற்போதைய கட்டுப்பாடுகள் எப்போது நீக்கப்படும் என்ற கேள்விக்கு பதிலளிக்க மறுத்த போரிஸ் ஜாசன், நாட்டை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டு வர சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் அரசாங்கம் எடுப்பதாக கூறினார். இங்கிலாந்தில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பால் 1,401 பேர் உயிரிழந்துள்ளனர். இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை உருமாறிய கரோனா உலகம் முழுவதும் சீனா உள்பட சுமார் 60 நாடுகளில் பரவியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products


Nalam PasumaiyagamThoothukudi Business Directory