» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா-சீனா இடையே அதிகரிக்கும் பதற்றத்தை கண்காணித்து வருகிறோம் - அமெரிக்கா அறிவிப்பு

வியாழன் 2, ஜூலை 2020 12:02:54 PM (IST)

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக உன்னிப்பாக கண்காணித்து வருவதாக அமெரிக்கா கூறி உள்ளது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் எல்லை பதற்றங்கள் மற்றும் பாதுகாப்பு பிரச்சினைகள் தொடர்பாக இரண்டு ஆசிய தேச அண்டை நாடுகளுக்கு இடையிலான நிலைமையை அமெரிக்கா உன்னிப்பாக கண்காணித்து வருவதாகக் கூறி வருகிறது. 
வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கெய்லீ மெக்னானி  செய்தியாளர்கல் கூட்டத்தில் கூறியதாவது:-

இந்தியாவும் சீனாவும் உண்மையான எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் பதற்றங்களை குறைக்க தயாராக உள்ளன, தற்போதைய சூழ்நிலையை அமைதியான முறையில் தீர்க்க அமெரிக்கா ஆதரவளிக்கும்.இந்தியா மற்றும் சீனாவைப் பொறுத்தவரை, நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம். 

லடாக் எல்லையில்  சீனாவின் ஆக்கிரமிப்பு நிலைப்பாடு உலகின் பிற பகுதிகளில் சீனாவின் ஆக்கிரமிப்பின் ஒரு பெரிய வடிவத்துடன் பொருந்துகிறது என்று அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.இந்த நடவடிக்கைகள் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் உண்மையான தன்மையை உறுதிப்படுத்துகின்றன என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory