» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதி: ஆளுநர்களுக்கு டிரம்ப் உத்தரவு!

சனி 23, மே 2020 12:20:28 PM (IST)

வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் ஆளுநர்களுக்கு டொனால்டு டிரம்ப் உத்தரவிட்டு உள்ளார்.

அமெரிக்காவில் கரோனா ஊரடங்கு  நடவடிக்கைகளை தளர்த்துவதை நோக்கி நாடு படிப்படியாக நகர்வதால், அமெரிக்க மாநில ஆளுநர்கள் வழிபாட்டுத் தலங்களை உடனடியாக மீண்டும் திறக்க அனுமதிக்க வேண்டும் என்று ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வெள்ளிக்கிழமை கூறி உள்ளார்.வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டொனால்டு டிரம்ப் கூறியதாவது:- 

தேவாலயங்கள், ஜெப ஆலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு இல்லங்களை இன்றியமையாத சேவைகளை வழங்கும் அத்தியாவசிய இடங்களாக நான் அடையாளம் காண்கிறேன் ஆளுநர்கள் சரியானதைச் செய்ய வேண்டும், இந்த மிக முக்கியமான அத்தியாவசிய நம்பிக்கை இடங்களை இப்போதே திறக்க அனுமதிக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்யாவிட்டால், நான் ஆளுநர்களை மீறி உத்தரவிடுவேன். அமெரிக்காவில், நமக்கு அதிக பிரார்த்தனை தேவை என கூறினார்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications




Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory