» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நீச்சல் உடை அணிந்து கரோனா வார்டில் பணிபுரிந்த நர்சுக்கு ஆதரவு பெருகுகிறது!!

வெள்ளி 22, மே 2020 4:24:37 PM (IST)



டூபீஸ் போன்ற உடை அணிந்து கரோனா வார்டில் பணிபுரிந்த நர்சுக்கு மாடலாகும் வாய்ப்பு குவிந்து வருகிறது

ரஷியாவில் கரோனா வைரசால்  3 லட்சத்திற்கும் அதிகமான பேர் பாதிக்கபட்டு உள்ளனர். 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உயிர் இழப்புகள் ஏறபட்டு உள்ளன.  ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 193 கி.மீ. தொலைவில் துலா என்ற நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கரோனா வைரஸ் வார்டில் ஒரு இளம் நர்ஸ் பணிபுரிந்து வருகிறார். இப்போது ரஷியாவில் கோடை வெயில் வறுத்தெடுத்து வருகிறது.இதன் காரணமாக அந்த இளம் நர்ஸ் டூபீஸ் நீச்சல் உடை அணிந்து, அதன் மேல் கரோனா வைரஸ் வார்டில் 

பணிபுரிவதற்கு உரிய பி.பி.இ. என்று அழைக்கப்படுகிற முழு உடல் கவச உடையை அணிந்துள்ளார்.ஆனால் ரஷியா முழுவதும் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அவர் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி பிராந்திய சுகாதார அமைச்சகம் கண்டனம் தெரிவித்தது. சுகாதாரம் மற்றும் தோற்றத்துக்கு இணங்க நர்சுகள் உடை அணிய வேண்டும் என்று கருத்து தெரிவித்தது. அதே நேரத்தில் சமூக வலைத்தளங்களில் அவருக்கு பாராட்டு குவிந்தது.அவரது சக செவிலியர்களூம் மருத்துவர்களும் நடியாவுக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர்.

உள்ளாடை தெரியும் விதத்தில் பாதுகாப்பு உடை அணிந்து பணி செய்ததால் பரபரப்பை ஏற்படுத்திய நர்ஸ் நடியா (வயது 23) அவரது புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சர்ச்சையிலும் அவருக்கு ஒரு நன்மையும் ஏற்பட்டுள்ளது.தற்போது  பிரபல உள்ளாடை நிறுவனமான மிஸ் எக்ஸ் லிங்கரி என்ற நிறுவனத்தின் தலைவரான அனஸ்தேசியா யகுஷேவா செவிலியர் நடியா எங்கள் நிறுவன மாடலாக வேண்டும் என்று விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார். அவருக்காக பல புதிய தயாரிப்புகளை உருவாக்க விரும்புகிறோம் என்று கூறியுள்ள அவர், எதிர் காலத்தில் வருடாந்திர ஒப்பந்தம் ஒன்றையும் அவருடன் செய்துகொள்ள விரும்புகிறோம் என்று கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Anbu Communications

Friends Track CALL TAXI & CAB (P) LTD


Black Forest Cakes




Thoothukudi Business Directory