» செய்திகள் - விளையாட்டு » உலகம்

உலக அளவில் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர்: பிரிட்டன் தலைவர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா பாதிப்பு!!

வெள்ளி 27, மார்ச் 2020 5:49:23 PM (IST)

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலக அளவில் கரோனாவால் பாதிக்கப்பட்ட முதல் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆவார். 

உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 24,071 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இதுவரை 5 லட்சத்து 31 ஆயிரத்து 799 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸால்    பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 17 ஆயிரத்து 446 பேர் குணமடைந்துள்ளனர். கரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. தற்போது வரை இந்தியாவில் கரோனா தாக்குதலுக்கு 17 பேர் உயிரிழந்துள்ளனர். 724 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா வைரஸ் தொற்று உலக நாடுகளில் 190 நாடுகளின் இயல்பு நிலையை பாதித்துள்ளது. இந்நிலையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு பிரபலங்கள் மற்றும் முக்கிய தலைவர்களையும் விட்டுவைக்கவில்லை. 

இந்நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள காணொளியில் கூறியதாவது; கடந்த 24 மணி நேரமாக தனக்கு மிக மெல்லிய அளவில் கரோனா அறிகுறிகள் தென்பட்டதாகவும், சோதனை செய்ததில் கரோனா உறுதியானதால் அமைச்சர்களுடன் தொடர்பு இல்லாமல் தனித்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். வீடியோ காணொளி மூலம் அரசை தொடர்ந்து நடத்தப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 55 வயதான போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை போல பிரிட்டனின் பட்டத்து இளவரசர் சார்லஸ்க்கும் கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD


Anbu Communications
Thoothukudi Business Directory