» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி

வெள்ளி 27, மார்ச் 2020 5:43:22 PM (IST)

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் பரவத் தொடங்கிய கரோனா வைரஸ் தொற்று, உலகம் முழுவதும் 180 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. மேலும் நாளுக்கு நாள் பலியானோரின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகின்றது. இந்த நிலையில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. போரிஸ் ஜான்சனுக்கு லேசான அறிகுறி இருந்த நிலையில் பரிசோதனை செய்ததில் தற்போது கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா உறுதியானதால் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளதாகவும், காணொலி மூலம் அரசு பணிகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டன் இளவரசர் சார்லஸ்-க்கு ஏற்கெனவே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications



Black Forest Cakes


Friends Track CALL TAXI & CAB (P) LTD




Thoothukudi Business Directory