» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கரோனா பரவலை தடுத்து சமாளிக்கும் மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது: உலக சுகாதார அமைப்பு

செவ்வாய் 24, மார்ச் 2020 4:24:19 PM (IST)

கரோனா வைரஸ் பரவலை தடுத்து சமாளிக்கும் மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது என உலக சுகாதார அமைப்பின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே ரியான் கூறினார்.

உலக சுகாதார அமைப்பின் (WHO) நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஜே ரியான் கூறியதாவது: கரோனா வைரஸ் பரவலை தடுத்து  சமாளிக்கும் மிகப்பெரிய திறன் இந்தியாவுக்கு உள்ளது, ஏனெனில் சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்று நோய்களை ஒழித்த அனுபவம் உள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் குறித்து பரிசோதிக்கும் ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். இந்தியா மிகவும் மக்கள் தொகை கொண்ட நாடு, இந்த வைரஸின் தாக்கம் மிக அதிக மற்றும் அடர்த்தியான நாட்டில் அதிகம் இருக்கும் என கருதப்படுகிறது.

சின்னம்மை மற்றும் போலியோ ஆகிய இரண்டு தொற்றுநோய்களை ஒழிப்பதில் இந்தியா உலகத்திற்கே வழிகாட்டியாக இருந்தது. எனவே இந்தியாவுக்கு மிகப்பெரிய திறன் உள்ளது. இந்தியா போன்ற நாடுகள் முன்பு செய்ததைப் போலவே உலகிற்கும் வழி காட்டியாக இருப்பது முக்கியமானது என கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications


Black Forest Cakes







Thoothukudi Business Directory