» செய்திகள் - விளையாட்டு » உலகம்

தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை இங்கிலாந்து மியூசியத்தில் கண்டுபிடிப்பு

செவ்வாய் 25, பிப்ரவரி 2020 12:44:06 PM (IST)

தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலை, இங்கிலாந்து அருங்காட்சியகத்தில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதை திருப்பி கொடுக்குமாறு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கோவில்களில் சிலைகள் திருடு போவதும், அவை வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டது கண்டறியப்பட்டு, மீட்கப்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்த வரிசையில், தமிழ்நாட்டில் சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் உள்ள திருமங்கை ஆழ்வார் சிலை, கடந்த 1957-ம் ஆண்டு திருடு போனது. இது, 15-ம் நூற்றாண்டு வெண்கல சிலை ஆகும். அதே போன்ற போலி சிலையை அந்த இடத்தில் வைத்துள்ளனர்.

இந்நிலையில், அந்த சிலை, இங்கிலாந்தில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள அஷ்மோலியன் அருங்காட்சியகத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஜே.ஆர்.பெல்மான்ட் என்ற கலெக்டரின் அபூர்வ பொருட்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்த சிலை, கடந்த 1967-ம் ஆண்டு, சூத்பி ஏல மையம் மூலமாக ஏலம் விடப்பட்டுள்ளது. அதை அஷ்மோலியன் அருங்காட்சியகம் ஏலத்தில் எடுத்துள்ளது.

இதற்கிடையே, கடந்த நவம்பர் மாதம், தனியார் ஆராய்ச்சியாளர் ஒருவர், அந்த திருமங்கை ஆழ்வார் சிலை, தமிழ்நாட்டில் இருந்து திருடப்பட்டது என்பதை கண்டுபிடித்து, அருங்காட்சியக நிர்வாகிகளிடம் தெரிவித்தார். உடனே, இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு அருங்காட்சியக நிர்வாகிகள் தகவல் தெரிவித்தனர். கூடுதல் ஆதாரங்கள் இருந்தால் அளிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதன்படி, தமிழ்நாட்டில் இருந்து சிலை தடுப்பு பிரிவு போலீசாரின் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது. 

அதில், தமிழ்நாட்டு கோவிலில் இருந்து திருடப்பட்ட திருமங்கை ஆழ்வார் சிலைதான் அது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலையை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு இந்தியா சார்பில் முறைப்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டது.  சிலையை ஒப்படைக்க அஷ்மோலியன் அருங்காட்சியகம் விருப்பம் தெரிவித்துள்ளது. இருப்பினும், தங்கள் பிரதிநிதியை தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைத்து, மேலும் ஆய்வு செய்து உறுதிப்படுத்த விரும்புவதாக கூறியுள்ளது. அதை ஏற்றுக்கொண்ட இந்திய அதிகாரிகள், இந்த பணியை விரைவுபடுத்துமாறு வலியுறுத்தி உள்ளனர். இத்தகவலை லண்டனில் உள்ள இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் (வர்த்தகம்) ராகுல் நந்த்கரே தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து

உண்மைMar 12, 2020 - 11:51:59 AM | Posted IP 162.1*****

தனது பெயர் கூட தமிழில் இல்லாதவன் & தமிழ் தெய்வங்களை வணங்காதவனே முட்டா டுமிலன்!

உண்மையின் உண்மைMar 11, 2020 - 08:57:15 PM | Posted IP 162.1*****

திருடியவர்கள் எல்லாம் முட்டா டுமிழன் இந்துக்கள் தானே ..

உண்மைMar 11, 2020 - 04:29:36 PM | Posted IP 108.1*****

இங்கிலாந்து திருடர்களின் தலைமையகம்? கோவில்கள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டும்!

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory