» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ராஜினாமாவைத் தவிர பிற கோரிக்கைகளை ஏற்க தயார்: இம்ரான் கான் திட்டவட்டம்

புதன் 6, நவம்பர் 2019 12:52:09 PM (IST)

ராஜினாமாவைத் தவிர எதிர்க்கட்சிகளின் பிற கோரிக்கைகளை ஏற்க தயார் என்று பாக். பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பதவி விலக கோரி, பிரபல மதகுருவும், ஜாமியாத் உலமா இ இஸ்லாம் பசல் தலைவருமான மவுலானா பஸ்லுர் ரகுமான் தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரமாண்ட போராட்டம் 5-வது நாளாக நேற்று நீடித்தது. கடந்த ஆண்டு நடந்த தேர்தலில் முறைகேடு செய்து இம்ரான் கான் ஆட்சியை பிடித்ததாக குற்றம் சாட்டி, அவரை பதவி விலகுமாறு எதிர்க்கட்சிகள் வற்புறுத்தி வருகின்றன.

மதகுருவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, ராணுவ மந்திரி பர்வேஸ் கட்டாக் தலைமையிலான குழுவை இம்ரான் கான் நியமித்துள்ளார். ஆனால், 2 தடவை பேச்சுவார்த்தை நடத்தியும் இழுபறி நீடிக்கிறது.இந்நிலையில், பேச்சுவார்த்தை குழுவிடம் நேற்று பேசிய இம்ரான் கான், ராஜினாமா கோரிக்கையை தவிர, நியாயமான அனைத்து கோரிக்கைகளையும் ஏற்க தயாராக இருப்பதாக மதகுருவிடம் தெரிவிக்குமாறு கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads

Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory