» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவன் பாக்தாதியின் சகோதரி சிரியாவில் கைது!

செவ்வாய் 5, நவம்பர் 2019 3:42:14 PM (IST)

சிரியாவில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர் பாக்தாதியின் சகோதரியை துருக்கி அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

உலக நாடுகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிய ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் தலைவர், அபுபக்கர் அல் பாக்தாதி, சிரியாவில் கடந்த மாதம் அவர் கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. சிரியாவில் இத்லிப் நகருக்கு அருகே பாரிஷா என்ற கிராமத்தில் ஒரு வளாகத்தில் பாக்தாதி, பதுங்கி இருப்பதை துப்பறிந்து கடந்த அக்டோபர் 26ம் தேதி, அமெரிக்க ராணுவம் சுற்றி வளைத்தது. தப்பிக்க ஒரு வழியும் இல்லை என்ற நிலையில் தன் உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்க வைத்து அல் பாக்தாதி பலியானதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், அல் பாக்தாதியின் மூத்த சகோதரி ராஸ்மியா (வயது 65), அவரது கணவர் மற்றும் குடும்பத்தினரை துருக்கி அதிகாரிகள் கைது செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை துருக்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாக நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.அந்த செய்தியில், வடக்கு சிரியாவில் உள்ள அலெப்போ மாகாணம் அஜாஸ் நகரில் கணவர் மற்றும் உறவினர்களுடன் வசித்துவந்த ராஸ்மியாவை நேற்று மாலை கைது செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் ராஸ்மியா தொடர்பில் இருக்கலாம் என நம்பப்படுகிறது. அவரை கைது செய்து விசாரணை நடத்துவதன் மூலம், உளவுத்துறைக்கு முக்கியமான தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்


Sponsored Ads


Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory