» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சனி கிரகத்தின் 20 புதிய நிலவுகளுக்கு பெயர் வைக்கும் போட்டி அறிவிப்பு

செவ்வாய் 8, அக்டோபர் 2019 7:43:49 PM (IST)

புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள சனி கிரகத்தின் 20  புதிய நிலவுகளுக்கு பெயர் வைப்பதற்காக பொதுமக்களுக்கு ஓர் போட்டி அறிவிக்கப்பட உள்ளது.

அமெரிக்காவின் கார்னிகி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸ் என்ற ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள்,  சனிக்கிரகத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில் சனி கிரகத்தை சுற்றுவரும் 20 புதிய துணைக் கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்த புதிய துணைக்கோள்கள் 5 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து சனி கிரகத்தை சுற்றி வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவற்றில் 17 துணைக்கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதைக்கு எதிரான பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன. மீதமுள்ள மூன்று துணைக் கோள்கள் சனி கிரகம் சுற்றும் பாதையில் சனி கிரகத்தை சுற்றி வருகின்றன.சனி கிரகத்திற்கு எதிரான பாதையில் சுற்றும் துணைக் கோள்கள் ஒரு முறை சனி கிரகத்தை சுற்றி வர 3 வருட காலமும், சனி கிரக பாதையில் சுற்றும் துணைக் கோள்களில் இரண்டு வருட காலம் எடுத்து கொள்ளும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் புதிய துணைக்கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதன் மூலம் அதிக நிலவுகளை கொண்ட கிரகத்தில் சனி முன்னிலை பெற்றுள்ளது.இந்த கண்டுபிடிப்பு தொடர்பாக கண்டுபிடிப்புக் குழுவை வழிநடத்திய கார்னிகி இன்ஸ்டிடியூட் ஆஃப் சயின்ஸின் ஸ்காட் ஷெப்பர்ட் கூறுகையில்,இந்தப் புதிய நிலவுகள் ஹவாயில் உள்ள மவுனா கே மலையில் பொருத்தப்பட்டுள்ள சுபரு தொலைநோக்கியைப் பயன்படுத்தி கண்டுபிடிக்கப்பட்டன. 

சனியின் 20 புதிய நிலவுகள் மிகக் சிறியது, ஒவ்வொன்றும் 5 கி.மீ விட்டம் கொண்டவை. சனியை இன்னும் 100 சிறிய நிலவுகள் சுற்றி வரக்கூடும். தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலவுகளுக்கு பெயரிடுவதற்காக பொதுமக்களுக்கு போட்டி ஒன்றை அறிவிக்க திட்டமிட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes




Anbu Communications

Nalam Pasumaiyagam

CSC Computer Education




Thoothukudi Business Directory