» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போர்ச் சூழலை பாகிஸ்தான் விரும்பவில்லை; இந்தியா உருவாக்குகிறது : இம்ரான் கான் குற்றச்சாட்டு

சனி 10, ஆகஸ்ட் 2019 10:10:47 AM (IST)

காஷ்மீர் விவகாரத்தில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்காக போர் ஏற்படுவது போன்ற சூழலை இந்தியா உருவாக்கி வருகிறது என்று பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள், பாகிஸ்தானுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளன. காஷ்மீர் விவகாரத்தை வைத்தும் பாகிஸ்தானில் அரசியல் நடப்பதால், இந்தியாவுக்கு பதிலடியாக ஏதாவது செய்தாக வேண்டும் என்ற நோக்கில், தூதரக மற்றும் வர்த்தக உறவுகளை முறித்துக் கொள்வதாக பாகிஸ்தான் அறிவித்தது. இந்நிலையில், இஸ்லாமாபாதில் தங்கள் நாட்டைச் சேர்ந்த முன்னணி பத்திரிகையாளர்கள் சிலருக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேட்டியளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் விவகாரத்தில் இருந்து சர்வதேச சமூகத்தின் கவனத்தை திசை திரும்பும் நோக்கில் எல்லையில் போர் ஏற்படுவது போன்ற சூழலை இந்தியா உருவாக்கி வருகிறது. முன்பு, புல்வாமா தாக்குதல் நடைபெற்றபோதும், காஷ்மீர் பிரச்னையில் இருந்து திசைத் திருப்ப, பாகிஸ்தான் வான் எல்லையில் அத்துமீறி பறந்து இந்திய விமானப் படையினர், போர் பதற்றத்தை உருவாக்கினார். அப்போதும், அவர்களது விமானத்தை சுட்டு வீழ்த்தி, பாகிஸ்தான் பதிலடி கொடுத்தது. இப்போது மீண்டும், இந்தியா போர் பதற்றத்தை உருவாக்க முயலுகிறது.இந்தியாவால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது உண்மைதான். இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்பட்டால், பாகிஸ்தான் தகுந்த பதிலடி கொடுக்கும்.

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்யத் தயார் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததையடுத்து, இந்தியா வேண்டுமென்றே காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.  இந்தியாவுடன் சுமுகமான உறவை மேம்படுத்தவே பாகிஸ்தான் முயற்சித்தது. ஆனால், இந்தியா அதற்கு எதிராக நடந்து வருகிறது. பாகிஸ்தான் போரை விரும்பவில்லை. அதே நேரத்தில் காஷ்மீரில் இந்தியா நிகழ்ந்தும் கொடுமைகளை சர்வதேச சமூகத்திடம் எடுத்துச் செல்லாமல் இருக்க முடியாது என்று இம்ரான் கான் குற்றம்சாட்டியுள்ளார்.


மக்கள் கருத்து

sankarAug 10, 2019 - 11:11:19 AM | Posted IP 162.1*****

ஏண்டா லூசு - எங்கள் பிராந்தியத்தில் - நாங்கள் செய்யும் மாற்றங்கள் இவை - உனக்கு என்ன பிரச்சினை - இங்கே இருந்து தீவிரவாதம் ஒலிக்கப்படும் - உங்கள் வாலை இனி ஆட்டமுடியாது - இரு தீவிரவாத ஆதரவு குடும்பங்கள் இப்போது அண்டர் ஸ்கேனர்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Nalam Pasumaiyagam

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory