» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்கிய நிறுவனத்துக்கு தடை: அமெரிக்காவுக்கு சீனா எச்சரிக்கை!!

செவ்வாய் 23, ஜூலை 2019 5:10:37 PM (IST)

ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஈரானிடம் இருந்து பண்டமாற்று முறையில் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் கச்சா எண்ணெய் வாங்கி வந்தன. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் தொகையில் பாதியளவுக்கு சில பொருட்களையும், மீதி பாதி அளவுக்கு ரூபாயிலும் இந்தியா செலுத்தி வருகிறது. இதேபோல் சீனாவும் வர்த்தகம் செய்து வந்தது.

கடந்த மே மாதத்துக்கு பிறகு ஈரானிடம் வர்த்தகம் செய்யக்கூடாது என அமெரிக்கா தடை உத்தரவு பிறப்பித்தது. எனினும் ஈரான் கச்சா எண்ணெய் விலை குறைவாகவும், லாபமாகவும் இருப்பதால் உலகின் பல நாடுகள் வெளியே தெரியாமல் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. இந்நிலையில், சீனாவைச் சேர்ந்த சுஹாய் சியோன்ரோங் நிறுவனம் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் அதனுடன் மற்ற நாடுகள் வர்த்தகம் செய்யக்கூடாது என தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ நேற்று தெரிவித்தார். அமெரிக்காவின் இந்த நடவடிக்கைக்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து சீன வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் ஹு சுனோயிங் கூறியதாவது: சீனா நிறுவனங்கள் மீது அமெரிக்கா தொடர்ந்து வர்த்தக தடை விதித்து வருவது ஏற்புடையைது அல்ல. ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வர்த்தகம் என்பது மற்ற நாடுகள் மற்றும் சர்வதேச சட்டத்திட்டத்தின்படியே நடைபெறுகிறது. அமெரிக்கா தனியாக முடிவுகளை எடுப்பதும், அதனை மற்ற நாடுகள் மீது வற்புறுத்துவதும் ஏற்கத்தக்கதல்ல. சீன நிறுவனங்கள் மீது இதுபோன்ற தடைவயை விதிப்பதை அமெரிக்கா நிறுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் நாட்டு நிறுவனங்களின் உரிமைகளையும், நடவடிக்கைகளையும் பாதுகாப்பது சீனாவின் அடிப்படை கடமை. இதனை அமெரிக்கா புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes

Nalam Pasumaiyagam


Anbu Communications

Thoothukudi Business Directory