» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்: இந்தியர்கள் உயிரிழப்பு 11 ஆக அதிகரிப்பு

வியாழன் 25, ஏப்ரல் 2019 3:46:42 PM (IST)இலங்கை தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்று கிழமை ஈஸ்டர் பண்டிகையன்று காலை மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திர ஓட்டல்கள் மீது திடீரென குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. அதன்பின் அன்று மதியம் 2 மணியளவில் இரு தற்கொலை தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இந்த தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர். 500 பேர் வரை காயமடைந்து உள்ளனர். இதுவரை 76 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. 

இது தொடர்பாக இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  குண்டுவெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்ட வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை 36 ஆக உயர்ந்துள்ளது. இவற்றில், வங்காளதேசம் 1, சீனா 2, இந்தியா 11, டென்மார்க் 3, ஜப்பான் 1, நெதர்லாந்து 1, போர்ச்சுகல் 1, சவுதி அரேபியா 2, ஸ்பெயின் 1, துருக்கி 2, இங்கிலாந்து 6, அமெரிக்கா 1, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர், ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேர் என 36 பேர் அடையாளம் காணப்பட்டு உள்ளனர். இதுவரை 14 வெளிநாட்டவர்களை பற்றிய விவரம் தெரியவரவில்லை. 12 வெளிநாட்டினர் காயமடைந்து உள்ளனர். அவர்கள் கொழும்பு நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என தெரிவித்து உள்ளது.


மக்கள் கருத்து

தனி ஒருவன்Apr 25, 2019 - 04:01:46 PM | Posted IP 141.1*****

பாவம்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes

CSC Computer Education

Nalam Pasumaiyagam


Thoothukudi Business Directory