» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கனடாவில் பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவம்: இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை

சனி 23, மார்ச் 2019 5:39:34 PM (IST)



கனடாவில் பேருந்து விபத்தில் 16 பேர் பலியான சம்பவத்திற்கு காரணமாக இருந்த இந்தியருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கனடாவின் ஒட்டாவா பகுதியில் கடந்த ஆண்டு ஏப்ரல் 6ஆம் தேதி ஜூனியர் ஹாக்கி வீரர்கள் உட்பட 29 பேர் பயணம் செய்த பஸ் நெடுஞ்சாலையில் வந்த போது, எதிரே கட்டுப்பாட்டினை மீறி தாறுமாறாக வந்த டிரக், பஸ்சின் மீது  வேகமாக மோதியது. இதில் 16 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். மேலும் 13 பேர் பலத்த காயமடைந்தனர். விபத்து தொடர்பாக டிரக் ஒட்டுனர் ஜஸ்கிரத் சிங் சித்து என்ற இந்தியர் மீது பாதிக்கப்பட்டவர்களின்  குடும்பத்தினர் மெபோர்ட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். 

நெடுஞ்சாலையில் விதிகளை மீறி வாகனம் ஓட்டியதாகவும், அவர் நினைத்திருந்தால் இந்த சம்பவத்தை தடுத்திருக்க முடியும் எனவும் குற்றம்சாட்டப்பட்டது.  இந்த வழக்கு விசாரணை முடிவைடைந்த நிலையில், நீதிபதி இனிஸ் கார்டினல்  தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கின் முக்கிய ஆவணமான, விபத்து நடந்த பகுதியின் தடயவியல் நிபுணர்கள் அளித்த ஆதாரங்களில், எவ்வித இயற்கை காரணிகளும் இவ்விபத்துக்கு காரணம் இல்லை என தெரிய வந்துள்ளது.  சித்து நெடுஞ்சாலையின் குறியீடுகளை சரியாக பின்பற்றப்படவில்லை.  

இவ்விபத்தை சித்துவால் தடுத்திருக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. நெடுஞ்சாலைகளின் வளைவுகளில் இருக்கும் பெரிய குறியீடுகளை கவனிக்காமலும், ஒளிரும் விளக்குகளை கவனிக்காமலும் அலட்சியமாக வாகனம் ஓட்டியுள்ளார். இதனால் இந்த கோரச்சம்பவம் நடந்திருக்கிறது. எனவே விபத்துக்கு காரணமான சித்துவிற்கு 8 ஆண்டு சிறை தண்டனை வழங்குவதாக தீர்ப்பு வழங்கினார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

New Shape Tailors


Black Forest Cakes


Joseph Marketing


Nalam Pasumaiyagam


CSC Computer Education



Thoothukudi Business Directory