» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சுற்றுலா பேருந்து தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி பலி: 28 பேர் காயம்... சீனாவில் சோகம்!!

சனி 23, மார்ச் 2019 12:03:56 PM (IST)சீனாவில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பேருந்து நேற்று திடீரென தீப்பிடித்ததில் 26 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். மேர்லும், 28 பேர் காயமடைந்தனர்.

சீனாவின் மத்தியில் உள்ள ஹுனான் மாகாணம் சாங்தே நகரில் 53 சுற்றுலாப் பயணிகள், 2 ஓட்டுநர்கள் மற்றும் ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆகியோருடன் நேற்று மாலை ஒரு பேருந்து சென்றுகொண்டிருந்தது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்தபோது பேருந்தின் ஒரு பகுதியில் திடீரென்று தீப்பிடித்தது. வேகமாக சென்றதால் காற்றின் வேகம் காரணமாக, சிறிது நேரத்தில் பேருந்து முழுவதும் தீப்பற்றியது. உள்ளே இருந்தவர்கள் தீக்காயங்களுடன் அலறித் துடித்தனர்.

தகவலறிந்து தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர், கடுமையாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த கோர விபத்தில் சிக்கி 26 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், இதில் 28 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். விபத்து தொடர்பாக பேருந்தின் இரண்டு டிரைவர்களையும் காவல்துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education

New Shape Tailors

Joseph Marketing

Nalam Pasumaiyagam


Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory