» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய தொலைக்காட்சிகள் கலாசாரத்தை சீரழிக்கிறது: தடையை நீக்க பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் மறுப்பு

வெள்ளி 11, ஜனவரி 2019 12:08:07 PM (IST)

இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவை நமது கலாசாரத்தை சீரழிப்பதாக பாகிஸ்தான் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார். 

பாகிஸ்தானின் உள்ளூர் தொலைக்காட்சி சேனல்களில் இந்திய டி.வி. நிகழ்ச்சிகளை ஒளிபரப்ப, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் கடந்த 2016-ம் ஆண்டு தடை விதித்தது. அதே போல் வனொலிகளில் இந்திய நிகழ்ச்சிகள் இடம் பெறவும் தடை விதிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2017-ம் ஆண்டு லாகூர் உயர்நீதிமன்றம் இந்த தடையை நீக்கி உத்தரவிட்டது. இதை எதிர்த்து பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார் தலைமையில் 3 நீதிபதிகளை கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் லாகூர் உயர்நீதிமன்றம் விதித்த தீர்ப்பை ரத்து செய்து, பாகிஸ்தான் மின்னணு ஊடக ஒழுங்குமுறை ஆணையத்தின் தடையை மீண்டும் அமல்படுத்தினர். இந்நிலையில் இந்த மனு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் பேசிய தலைமை நீதிபதி மியான் சாஹிப் நிசார், "இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாகிஸ்தான் சேனல்களில் ஒளிபரப்ப நாம் அனுமதிக்கக்கூடாது. ஏனெனில் அவை பாகிஸ்தானின் கலாசாரத்தை சீரழிக்கிறது” என காட்டமாக கூறினார். அதனை தொடர்ந்து வழக்கு விசாரணையை பிப்ரவரி முதல் வாரத்துக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications


CSC Computer Education

Nalam Pasumaiyagam





Thoothukudi Business Directory