» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 8 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

வியாழன் 10, ஜனவரி 2019 1:50:08 PM (IST)

சிறை பிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் மீட்க அவர்களுடைய குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், அவர்களை விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஜனவரி 5ஆம் தேதி ஜெகதாப்பட்டினத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற விசைப்படகு என்ஜின் பழுது காரணமாக நடுக்கடலில் தத்தளித்தபோது, அதில் இருந்த சதிஷ் (33), அஜீத் (24), தர்மராஜ் (47), ராமச்சந்திரன் (45) ஆகிய 4 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். ஜனவரி 7ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ஜோசப் (56), ராணிஸ்சன் (36), மணிகண்டன் (33), ராஜா (34), விஜி (30) ஆகிய 4 பேரும் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்தபோது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். 

சிறை பிடிக்கப்பட்ட 8 மீனவர்களையும் மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுக்க வேண்டும் என்று அவர்களுடைய குடும்பத்தினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களையும் விடுதலை செய்யுமாறு இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Nalam Pasumaiyagam



Anbu Communications


CSC Computer Education


Black Forest Cakes

Joseph Marketing



Thoothukudi Business Directory