» செய்திகள் - விளையாட்டு » உலகம்

போதை மருந்து கொடுத்து 1000 பெண்கள் பாலியல் பலாத்காரம்: அமெரிக்காவின் பிரபல டாக்டர் கைது

புதன் 19, செப்டம்பர் 2018 5:16:06 PM (IST)

அமெரிக்காவில் போதை மருந்து கொடுத்து 1000 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்த எலும்பு முறிவு டாக்டரை போலீசார் கைது செய்தனர். உடந்தையாக இருந்த காதலியும் கைது செய்யப்பட்டார்.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் அருகேயுள்ள நியூபோர்ட் பீச் நகரை சேர்ந்தவர் கிராண்ட் வில்லியம் ரோபிக்யக்ஸ்  (38). எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணராவார். இவர் அமெரிக்காவின் டெலிவிஷன் ரியாலிட்டி ஷோவிலும் பெங்கு பெற்று உள்ளார். இவரது காதலி செரிசா லாரா ரிலே (31). இவர்கள் இருவரும் மதுப்பிரியர்கள். பார்களுக்கு செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தனர். 

அங்கு வரும் அழகிய பெண்களை பேச்சின் மூலம் வசியம் செய்து அவர்களுடன் ரோபிசியஸ் நட்புறவை ஏற்படுத்துவார். பின்னர் அவர்களுக்கு கோகைன் உள்ளிட்ட போதை மருந்துகளை வழங்கி பாலியல் பலாத்காரம் செய்து வந்தார். இதற்கு அவரது காதலி ரிலே உடந்தையாக இருந்தார். இந்லையில் அவரால் கற்பழிக்கப்பட்ட 2 பெண்கள் போலீசில் புகார் செய்தனர். அதில் ரோபிசியஸ் தங்களை விருந்துக்கு அழைத்து போதைபொருள் வழங்கியதாகவும், நியூபோர்ட் பீச்சில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாகவும் புகார் செய்தனர்.

எனவே, ரோபிசியசையும், அவரது காதலி ரிலேவையும் ஆரஞ்கவுண்டி போலீசார் கைது செய்தனர். பின்னர் ரோபிசியஸ் செல்போனை சோதனை செய்தபோது 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் அவர் இருக்கும் ஆபாச வீடியோக்கள் இருந்தன. விசாரணையில் இவர்களால் 1000-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.  இந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரோபியசியசுக்கு 40 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கிடைக்கும். அவரது காதலி ரிலேவுக்கு 30 ஆண்டு தண்டனை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து

மக்கள்Sep 19, 2018 - 06:20:47 PM | Posted IP 162.1*****

போலி செய்தி

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Nalam PasumaiyagamNew Shape Tailors


CSC Computer Education

Anbu Communications
Thoothukudi Business Directory