» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரானிடம் இருந்து வழக்கம் போல் கச்சா எண்ணெய் இறக்குமதி: இந்தியன் ஆயில் காப்பரேஷன் முடிவு

வெள்ளி 14, செப்டம்பர் 2018 11:19:04 AM (IST)

ஈரானிடம் இருந்து எப்போதும் போல் அக்டோபர் மாதத்துக்கான 7.5 முதல் 8 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய இந்தியன் ஆயில் காப்பரேஷன் பதிவு செய்துள்ளது.

ஈரான் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ள அமெரிக்கா அந்நாட்டிடம் இருந்து யாரும் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக்கூடாது என உத்தரவிட்டது. மீறி இறக்குமதி செய்யும் நாடுகள் மீதும் பொருளாதார தடை விதிக்கப்படும் என எச்சரித்துள்ளது. ஈரானிடம் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இந்த நிதியாண்டில் ஈரானிடம் இருந்து 2.5 கோடி டன் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய இந்தியா முடிவெடுத்துள்ளது.

ஆனால், அமெரிக்காவின் எச்சரிக்கை காரணமாக ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் அளவை குறைக்க இந்தியா திட்டமிட்டது. அதேசமயம் இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என அமெரிக்காவிடம் கோரியுள்ளது. கடந்த வாரம் இந்தியா வந்திருந்த அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கு விலக்கு அளிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலிக்கும் என தெரிவித்தார். ஒருவேளை அதற்கு ஒப்புதல் கிடைத்தாலும் அந்த விலக்கு குறைந்த காலத்துக்கு தான் வழங்கப்படும் என மைக் பாம்பியோ கூறினார்.

இதற்கிடையில் ஈரானிடம் எண்ணெய் இறக்குமதி செய்வது பற்றி இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களிடம் மத்திய அரசு எந்த தெளிவான உத்தரவும் பிறப்பிக்கவில்லை. அதை தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வழக்கம் போல் இந்த  2018-19 நிதியாண்டுக்கான 90 லட்சம் டன் கச்சா எண்ணெய்யை ஈரானிடம் இருந்து இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் மாதத்துக்கான 7.5 லட்சம் டன் எண்ணெய்யை இறக்குமதி செய்ய முன்பதிவு செய்துள்ளது.

ஆனால் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள இரண்டாம் கட்ட பொருளாதார தடைகள் வரும் நவம்பர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகின்றன. அதன்பின் ஈரான் – இந்தியா இடையேயான கடல் போக்குவரத்து கடுமையாக பாதிக்கும். அப்போது ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பில்லாமல் போகலாம். ‘‘இப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த விவகாரம் குறித்து இந்திய அரசு என்ன முடிவெடுக்கும் என்பது தெரியவில்லை. ஈரானிடம் இருந்து எண்ணெய் இறக்குமதியை நிறுத்தலாமா அல்லது தொடரலாமா என்பதை அரசு இதுவரை அறிவிக்கவில்லை. 

நவம்பர் மாதம் என்ன நடக்கும் என தெரியவில்லை. அதற்கு முன் இந்த விஷயத்தில் ஒரு தெளிவான பதில் கிடைக்கும் என நம்புகிறோம்’’ என்று இந்தியன் ஆயில் காப்பரேஷன் தெரிவித்துள்ளது.  மற்ற இந்திய எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் காப்பரேஷன் லிமிடெட் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் காப்பரேஷன் லிமிடெட் இரண்டும் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்தியுள்ளன. ஆனால் அதற்கு காரணம் வேண்டிய இருப்பு இருப்பதுதான் தவிர அமெரிக்காவின் பொருளாதார தடை அல்ல என தகவல் வெளியாகியுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


CSC Computer Education


Anbu Communications

Black Forest Cakes


Nalam Pasumaiyagam



Thoothukudi Business Directory