» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் புகுந்த கார்: கோர விபத்தில் 9பேர் பலி - 40பேர் படுகாயம்!!

வியாழன் 13, செப்டம்பர் 2018 12:07:03 PM (IST)

சீனாவில் மக்கள் கூட்டத்திற்குள் கார் புகுந்ததில் 9 பேர் உயிரிழந்தனர். 40 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

சீன நாட்டின் ஹூனான் மாகாணத்தில் மக்கள் அதிகம் கூடியிருந்த பகுதியில் நேற்று ஒரு கார் வேகமாக வந்தது. அந்த கார் மக்கள் கூட்டத்தின் மீது மோதியது. இதில் 9 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 46 பேர் படுகாயம் அடைந்தனர். அந்த பகுதியில் இருந்த போலீசார் அந்த நபரை சுற்றி வளைத்துப் பிடித்து விசாரித்தனர். 

விசாரணையில் அவர் யாங் ஜான்யுன் (54) என்றும், பல்வேறு குற்ற வழக்குகளில் பலமுறை சிறை சென்ற குற்றவாளி என்பதும் தெரியவந்தது. தொடர்ந்து, அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சீனாவில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அந்நாட்டில் அதிகரித்துள்ள நிலையில்,  கடந்த சில ஆண்டுகளில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


crescentopticals

Joseph Marketing




Friends Track CALL TAXI & CAB (P) LTD


New Shape Tailors



Thoothukudi Business Directory