» செய்திகள் - விளையாட்டு » உலகம்

கூகுளில் முட்டாள் என்று தேடினால் டொனால்டு ட்ரம்ப் புகைப்படம் வருவதால் சர்ச்சை

சனி 21, ஜூலை 2018 12:24:40 PM (IST)

கூகுளில் முட்டாள் என்று தேடினால் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் புகைப்படங்கள் வந்து நிற்பது சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அவருடைய அதிரடி முடிவுகளால் பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டு வருகிறார். இதன் காரணமாக அவர் மீதான இணையதள தாக்குதல்களும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், பிரபல தேடுபொறி தளமான கூகுளில் முட்டாள் (idiot) என்று தேடினால் ட்ரம்பின் புகைப்படங்கள் தெரிவது புதிய சர்ச்சையை உருவாக்கியுள்ளது.

ட்ரம்பிற்கு எதிராக இணையதள போராட்டத்தை மேற்கொள்பவர்கள், ரெட்டிட் எனும் இணையதளத்தில் அவர் படத்துடன் முட்டாள் என்ற வார்த்தையை இணைக்கும் நூதன போரட்டத்தில் இறங்கியுள்ளனர். இதற்கான பிரசாரங்களையும் சர்வதேச அளவில் வெளிப்படையாகவே அவர்கள் மேற்கொண்டுள்ளனர். இதனால், தேடலுக்கு கூகுள் உபயோகப்படுத்தும் ‘அல்காரிதம்’ இணையதளத்தில் முட்டாள் என தேடினால் ட்ரம்பிம் படத்தையும் சேர்த்து தேடி பயனருக்கு கொடுக்கிறது.  கடந்த மே மாதம் கூகுளின் தேடலில் ‘பப்பு’ என்ற இந்தி வார்த்தைக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் புகைப்படமும், ‘பேகு’ என்ற இந்தி வார்த்தைக்கு பிரதமர் மோடியின் படமும் கூகுளில் தெரிந்து சர்ச்சைக்குள்ளானது குறிப்பிடத்தக்கது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

CSC Computer Education


Joseph Marketing

New Shape Tailors

Nalam Pasumaiyagam



Anbu Communications

Black Forest Cakes



Thoothukudi Business Directory