» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து குழந்தைகள் உட்பட 11 பேர் பலி: அமெரிக்காவில் சோகம்

வெள்ளி 20, ஜூலை 2018 12:44:02 PM (IST)அமெரிக்காவில் பிரான்சன் பகுதியில் உள்ள டேபிள் லாக் ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்காவில் பிரான்சன் பகுதியில் டேபிள் ராக் என்ற ஏரி சுற்றுலா பயணிகளை கவரும் பொழுது போக்கும்  தலமாக உள்ளது.  இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் 30க்கும் ஏற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒரு படகில் சென்றுகொண்டிருக்கும் போது ஏரியின் மையத்தில் திடீரென படகு கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த படகில் பயணம் செய்த அனைவரும் ஏரியில் மூழ்கினர்.  இது குறித்து தகவல் அறிந்து வந்த மீட்பு குழுவினர் ஏரியில் தத்தளித்துக்கொண்டிருந்த 7 பேரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். 

மேலும் உயிரிழந்த 8 பேர் உடல்கள் மீட்டகப்பட்டது. மேலும் மூழ்கியுள்ளவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது உயிரிழந்தவர்கள் 11 பேர் என்றும் அவர்களில் சிலர் குழந்தைகள் என்பது தெரியவந்துள்ளது. மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டவர்களில் 4 ஆண்கள் 3 குழந்தைகள் ஆவார்.  இரவு நேரம் என்பதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors

Joseph MarketingFriends Track CALL TAXI & CAB (P) LTD

crescentopticalsThoothukudi Business Directory