» செய்திகள் - விளையாட்டு » உலகம்

எச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு

திங்கள் 21, மே 2018 12:19:37 PM (IST)

இந்தியர்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கருதப்பட்ட எச்–4 விசா’ விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை என்று அமெரிக்கா அறிவித்து உள்ளது.

அமெரிக்க நாட்டில் குடியுரிமை பெறாமல், அங்கு தங்கி இருந்து வேலை செய்கிறவர்களுக்கு ‘எச்–1’ பி விசா வழங்கப்படுகிறது. அந்த விசாவில் பணியாற்றுகிறவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கு ‘எச்–4’ விசா கொடுத்து, அங்கேயே வேலை பார்க்கும் திட்டத்தை அதிபர் ஆக இருந்தபோது ஒபாமா கொண்டு வந்தார். அதை நீக்கிவிட தற்போதைய டிரம்ப் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதனால் பெருமளவில் இந்தியர்கள் பாதிப்புக்கு ஆளாகும் நிலை உருவாகி உள்ளது.

ஆனால் ஒபாமா காலத்தில் கொண்டுவரப்பட்ட இந்த திட்டத்தை தொடர வேண்டும் என்று இந்திய வம்சாவளி எம்.பி., பிரமிளா ஜெயபால் தலைமையில் 130 எம்.பி.க்கள் அந்த நாட்டின் உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கிறிஸ்ட்ஜென் நீல்சனிடம் மனு அளித்தனர். இந்நிலையில், அமெரிக்க குடியுரிமை மற்றும் குடிவரவு சேவைகள் அமைப்பின் செய்தி தொடர்பாளர் பிலிப் ஸ்மித், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், ‘‘சட்டம் இயற்றுகிற நடைமுறை முடிகிற வரையில், ‘எச்–4’ விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட மாட்டாது. அமெரிக்காவில் அமெரிக்கர்களையே பணி அமர்த்த வேண்டும் என்ற அதிபரின் உத்தரவை அமல்படுத்தும் விதத்தில், நிறைய கொள்கைகள், ஒழுங்குமுறைகள் மாற்றப்பட உள்ளன. அதில் வேலை வாய்ப்பு அடிப்படையில் விசா வழங்கும் திட்டமும் அடங்கும்’’ என்று குறிப்பிட்டார். இதனால் அமெரிக்க வாழ் இந்தியர்கள் தற்காலிகமாக சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Joseph Marketing

New Shape Tailors

crescentopticals

Friends Track CALL TAXI & CAB (P) LTDThoothukudi Business Directory