» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள் விரைவில் வெளியேறும் : ரஷ்ய அதிபர் புதின் அறிவிப்பு

சனி 19, மே 2018 4:03:25 PM (IST)

சிரியாவிலிருந்து வெளிநாட்டுப் படைகள்  விரைவில் வெளியேறும் என்று ரஷ்ய அதிபர் புதின் அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பான செய்தியை சிரிய அரசு ஊடகமான சனா வெளியிட்டுள்ளது. சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தின் திடீர் ரஷ்ய சந்திப்பில் புதின் இதனை தெரிவித்திருக்கிறார்.இதுகுறித்து புதின் கூறும்போது,  "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் கிடைந்த வெற்றிகளையும், பயங்கரவாதத்துக்கு எதிரான சிரிய ராணுவத்தின் வெற்றிகளையும் நாங்கள் தொடர்புப்படுத்தியே பார்கிறோம். விரைவில் வெளிநாட்டுப் படைகள் சிரியா பிராந்தியதிலிருந்து வெளியேறும்” என்றார்.

சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் 2014 ஆம் ஆண்டு முதல் சண்டையிட்டு வருகிறார்கள். சுமார் ஆறு ஆண்டுகளாக நடக்கும் சிரிய போரில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பஷார் அல் ஆசாத்துக்கு ஆதரவாக ரஷ்யாவும் ஆதரவு அளித்து வந்தனர்.கடந்த ஆறு மாதங்களில் உள்நாட்டு போர் தீவிரமானது, இதில் சிரிய ராணுவத்தினர் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டிலிருந்து பல பகுதிகளை கைப்பற்றியுள்ளனர். இன்னும் எஞ்சிய பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்கள் தங்கள் பகுதியிலிருந்து வெளியேறி வருகின்றனர். சிரியா உள் நாட்டு போரில் ரஷ்ய படைகளின் உதவியுடன் பஷார் தலைமையிலான அரசு குறிபிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



New Shape Tailors



Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals

Joseph Marketing



Thoothukudi Business Directory