» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பாகிஸ்தானில் சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப அனுமதி

செவ்வாய் 15, மே 2018 11:38:31 AM (IST)

பாகிஸ்தானில் சாலை விபத்து ஏற்படுத்திய அமெரிக்க தூதரக அதிகாரி நாடு திரும்ப பாகிஸ்தான் அனுமதி அளித்துள்ளது.

பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் பணியாற்றியவர்  ராணுவ இணைப்பு அதிகாரி காலினல் ஜோசப் இமானுவேல் ஹால். இவர் கடந்த ஏப்ரல் 7ம் தேதி இஸ்லாமாபாத்தின் வடக்கு பகுதியில்,  காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளில், ஹாலின் கார் மோதியது. இந்த விபத்தில் அடீக் பெய்க் என்ற இளைஞர் உயிரிழந்தார். சிக்னல் விதிகளை மதிக்காமல், ஹால் வாகனம் ஓட்டிச்சென்றதாலே விபத்து நேரிட்டதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது. 

இருப்பினும், துதரக சலுகை பெற்று இருப்பதால், ஹால் கைது செய்யப்படவில்லை.  ஹாலை கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் அரசு சேர்த்தது. இதையடுத்து, அதிகாரியை அழைத்து செல்ல அமெரிக்கா விமானம் ஒன்றை அனுப்பியது. ஆனால், இமானுவேல் ஹால், செல்வதற்கான அனுமதியை பாகிஸ்தான் அரசு அளிக்கவில்லை. இதனால், இரு நாடுகளுக்கு இடையே இந்த விஷயத்தில் மோதல் ஏற்பட்டது. இந்நிலையில், ஹால், அமெரிக்கா செல்வதற்கான பாகிஸ்தான் அரசு அனுமதி அளித்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD




New Shape Tailors


crescentopticals

CSC Computer Education



Thoothukudi Business Directory