» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சிங்கப்பூரில் தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும்: அமைச்சர் ஈஸ்வரன் உறுதி

திங்கள் 14, மே 2018 4:52:43 PM (IST)

சிங்கப்பூரில் தமிழ்மொழி தொடர்ந்து ஆட்சிமொழியாக இருக்கும் என்று அந்நாட்டு வர்த்தக உறவு மற்றும் தகவல் தொடர்பு துறை அமைச்சர் ஈஸ்வரன் உறுதியளித்துள்ளார். 

சிங்கப்பூரில் உள்ள 4 அதிகாரப்பூர்வ ஆட்சி மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று. பள்ளி, கல்லூரிகளில் தமிழ், தாய் மொழியாக கற்பிக்கப்பட்டு வருவதுடன் சிங்கப்பூர் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் அந்நாட்டு கரன்சியான டாலரிலும் தமிழ் மொழி இடம் பெற்றுள்ளது. அத்தகைய மரியாதை சிங்கப்பூரில் தமிழ் மொழிக்கு வழங்கப்பட்டுள்ளது.

இது குறித்து அமைச்சர் ஈஸ்வரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தமிழ் மொழி தொடர்ந்து அதிகாரப்பூர்வ ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் தமிழ் மொழிக்கு ஆதரவு என்பதிலும் காப்பதிலும் அரசு உறுதியாக உள்ளது என்று தெரிவித்தார்.  மேலும் இளைஞர்கள் தினந்தோறும் அதிகயளவில் தமிழ் மொழியை பயன்படுத்தி அந்த மொழிக்கு உயிரோட்டம் அளிக்க வேண்டும் என்றும் தமிழ் மொழி மற்றும் அதன் கலாசாரத்தை கொண்டாடுவதற்கும், ஊக்குவிப்பதற்கும், இளைய தலைமுறையினர் முயற்சி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads






Friends Track CALL TAXI & CAB (P) LTD


crescentopticals





Thoothukudi Business Directory