» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியாவில் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை :ஐக்கியநாடுகள் சபை கண்டனம்

வியாழன் 19, ஏப்ரல் 2018 12:21:17 PM (IST)

காஷ்மீரில் 8 வயது சிறுமி கொலை மற்றும் உன்னாவில் பெண் பலாத்காரம் சம்பவங்களுக்கு ஐநா சபையின் பெண்கள் அமைப்பும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இதுகுறித்து ஐக்கியநாடுகள் சபை பெண்கள் அமைப்பின் தலைவர் மிலம்போ- நகோடா கூறுகையில், காஷ்மீர் மாநிலத்தில் சிறுமி பாலியல் வன்முறையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மற்றும் உத்தரபிரதேசத்தில் நடந்த பெண் பலாத்காரம் சம்பவங்கள் கண்டனத்துக்குரியவையாகும். இந்த சம்பவங்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ள பிரதமர் நரேந்திர மோடி, அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளார். 

இதுபோன்ற சம்பவங்கள் மனித சமுதாயத்துக்கே ஆபத்தானது ஆகும். இந்த சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் அது அனைத்து மனித சமுதாயத்துக்கும் எச்சரிக்கை விடுக்கும் பொறுப்பில் இருந்து நாம் விலகுவதாக அமையும். இந்த செயலில் ஈடுபடுபவர்கள் மீது எடுக்கப்படும் சட்ட ரீதியிலான தண்டனைகள் மூலமே பலாத்காரம் - கொலை இல்லாத நிலை ஏற்படும்’ என்றார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Gift

Sponsored Ads


New Shape Tailors



crescentopticals



Joseph Marketing

Friends Track CALL TAXI & CAB (P) LTD



Thoothukudi Business Directory