» செய்திகள் - விளையாட்டு » உலகம்

நேபாளத்தில் தரையிறங்கியபோது வங்கதேச விமானம் விபத்து: 50 பயணிகள் உயிரிழப்பு

திங்கள் 12, மார்ச் 2018 5:46:47 PM (IST)



வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் கால்பந்து மைதானம் ஒன்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

வங்கதேசத்தில் இருந்து அமெரிக்கா நோக்கி வங்கதேச பயணிகள் விமானம் ஒன்று திங்கள் காலை சென்று கொண்டிருந்தது. தன்னுடைய பயணத்தின் ஒரு பகுதியாக நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க வேண்டும். அவ்வாறு அந்த விமானம் தரையிறங்க முயன்ற பொழுது நிலை தடுமாறி அருகில் இருந்த கால்பந்து மைதானமொன்றில் விழுந்து விபத்துக்குளானது.

விபத்துக்குள்ளான விமானத்தில் 67 பயணிகள் பயணம் செய்ததாக கூறப்படுகிறது. இவ்விபத்தில் 50 பயணிகள் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.விபத்துக்குள்ளான விமானம் உடனடியாகத் தீப்பற்றி எரியத் துவங்கியது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் ராணுவத்தினர் ஈடுபட்டுள்ளனர். சம்பவ இடத்தில இருந்து முதல்கட்டமாக 17 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மோசமான வானிலையே இவ்விபத்துக்கான காரணம் என்று கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Joseph Marketing

New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals



Thoothukudi Business Directory