» செய்திகள் - விளையாட்டு » உலகம்

பார்சலில் வந்த வெள்ளை நிற பவுடர்: முகர்ந்து பார்த்த டிரம்ப் மருமகளுக்கு திடீர் மூச்சுத்திணறல்!!

செவ்வாய் 13, பிப்ரவரி 2018 4:20:48 PM (IST)

பார்சலில் வந்த வெள்ளை நிற பவுடை முகர்ந்து பார்த்ததால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகளுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மூத்த மகன் டொனால்டு டிரம்ப் ஜூனியரின் மனைவி வெனிஷா. இவர்கள் அமெரிக்காவில் உள்ள மன்ஹட்டான் நகரில் வசித்து வருகின்றனர்.. இந்த நிலையில் நேற்று டிரம்ப் மருமகளுக்கு தபால் ஒன்று வந்துள்ளது. அதனை பிரித்து பார்த்த போது திடீரென்று அவருக்கு இருமல், மூச்சுத் திணறல் மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவரது தாய் மற்றும் வீட்டு பணியாளர்களுக்கும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் டிரம்ப் மருமகள் உள்பட பாதிக்கப்பட்ட அனைவரும் நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இதுகுறித்து நடைபெற்ற விசாரணையில் ஜூனியர் டிரம்ப் என்ற பெயரில் வந்த கவரில் வெள்ளை நிற பவுடர் இருந்ததாகவும், அதனை சுவாசிக்கும் போது தான் இந்த சம்பவம் நிகழ்ந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. அந்த கவரில் ஆந்த்ராக்ஸ் என்ற விஷம் உள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக நியூயார்க் போலீஸ் மற்றும் சீக்ரெட் உளவுத்துறை இணைந்து இது குறித்து மேலும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


New Shape Tailors

Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals



Joseph Marketing




Thoothukudi Business Directory