» செய்திகள் - விளையாட்டு » உலகம்
பாகிஸ்தானில் சீன நிர்வாக இயக்குனர் படுகொலை: சீனாவின் பொருளாதார பாதை திட்டத்துக்கு சிக்கல்
செவ்வாய் 13, பிப்ரவரி 2018 2:41:28 PM (IST)
பாகிஸ்தானில் சீன நிர்வாக இயக்குனர் படுகொலை செய்யப்பட்டதால் சீனா-பொருளாதார பாதை திட்டத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் கராச்சியில் 1994ம் ஆண்டு முதல் ஷாங்காயை சேர்ந்த காஸ்கோ ஷிப்பிங் லைன்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் பாகிஸ்தான் பிரிவு நிர்வாக இயக்குனராக சீனாவை சேர்ந்த சென் ஜு ( 46) பணியாற்றி வந்தார். கடந்த 5ம் தேதியன்று மார்க்கெட்டுக்கு பொருட்கள் வாங்க சென்ற சென் ஜு மர்ம நபரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார். பாகிஸ்தான் போலீசார் இந்த வழக்கை தீவிரவாத ஒழிப்பு பிரிவுக்கு மாற்றினர். இருப்பினும் இதுவரை சென் ஜு படுகொலை செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவில்லை.
பாகிஸ்தானில் தங்கள் நாட்டை சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்டு இருப்பது சீனாவுக்கு கவலை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து பாகிஸ்தா னிடம் தங்கள் நாட்டு குடிமக்களுக்கான பாதுகாப்பை அதிகரிக்கும்படி சீனா வலியுறுத்தியுள்ளது. சீன அதிபர் ஜின்பிங்கின் உயர்ந்த லட்சியமான பட்டு சாலை திட்டத்தின் துணை திட்டமான சீனா-பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில் சீனா பாகிஸ்தானில் 5000 கோடி டாலர் முதலீடு செய்கிறது. தற்போது பாகிஸ்தானில் சீனர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் இந்த திட்டத்துக்கு பெரும் சிக்கல் எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)

அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:18:42 AM (IST)

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிரிவு: இளவரசர்கள் மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 10:37:44 AM (IST)

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் : பாகிஸ்தான் கருத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:34:22 PM (IST)

இந்திய தேசியக் கொடியுடன் மாணவர்கள் நடனம்; பாகிஸ்தானில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:27:05 AM (IST)

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ஜப்பான் பரிந்துரை
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:22:19 AM (IST)
