» செய்திகள் - விளையாட்டு » உலகம்
மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை தீவிரவாதியாக அறிவிக்கும் பாகிஸ்தான்!!
செவ்வாய் 13, பிப்ரவரி 2018 10:27:42 AM (IST)
தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான அவசர சட்டத்துக்கு பாகிஸ்தானின் அதிபர் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் அங்கு வசித்து வரும் மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்ட ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு தீவிரவாதியாக அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் 2017 ஜனவரியில் தீவிரவாத தடுப்புச் சட்டத்தின்கீழ் ஹபீஸ் சயீத் மற்றும் அவரது கூட்டாளிகள் 4 பேரை கைது செய்து 90 நாட்கள் வீட்டு காவலில் பஞ்சாப் மாகாண அரசு வைத்தது. மேலும் தொடர்ந்து வீட்டு காவலை நீடித்து வந்தது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் ஹபீஸ் சயீத்தை வீட்டு காவலிலிருந்து விடுதலை செய்ய வேண்டும் என்று அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இந்த நிலையில் ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட லஷ்கர் இ தொய்பா மற்றும் அல்கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு அவசர சட்டம் இயற்றியது.
இதற்கு அந்நாட்டு அதிபர் ஹூசைன் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த சட்டத்தின் கீழ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட தனிநபர்கள் மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியும். அதாவது அந்த அமைப்புகளின் அலுவலகத்துக்கு சீல் வைப்பது மற்றும் வங்கி கணக்குகளை முடக்குவது போன்ற நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ள முடியும். இந்த அவசர சட்டம் தீவிரவாத அமைப்புகளுக்கு கடிவாளம் போடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீத்தை அந்நாட்டு அரசு தீவிரவாதியாக அறிவிக்கும் என்றும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

புல்வாமா பயங்கரவாத தாக்குதலால் எங்களுக்கு என்ன பயன்? பாக். பிரதமர் இம்ரான்கான் கேள்வி
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 4:26:49 PM (IST)

அவசர நிலை பிரகடனம்: டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக 16 மாகாணங்கள் நீதிமன்றத்தில் வழக்கு
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 11:18:42 AM (IST)

இங்கிலாந்து அரச குடும்பத்தில் பிரிவு: இளவரசர்கள் மனைவிகளுக்குள் ஒத்துபோகவில்லை!
செவ்வாய் 19, பிப்ரவரி 2019 10:37:44 AM (IST)

புல்வாமா தாக்குதலுக்கு இந்திய உளவுத்துறையின் தோல்வியே காரணம் : பாகிஸ்தான் கருத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 12:34:22 PM (IST)

இந்திய தேசியக் கொடியுடன் மாணவர்கள் நடனம்; பாகிஸ்தானில் பள்ளியின் அங்கீகாரம் ரத்து!
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:27:05 AM (IST)

வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திய டிரம்புக்கு அமைதிக்கான நோபல் பரிசு: ஜப்பான் பரிந்துரை
திங்கள் 18, பிப்ரவரி 2019 10:22:19 AM (IST)
