» செய்திகள் - விளையாட்டு » உலகம்

சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு : இந்தியா - ஓமன் இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து

திங்கள் 12, பிப்ரவரி 2018 4:18:34 PM (IST)



இந்தியா - ஓமன் இடையே சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பான 8 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி 4 நாட்கள் சுற்றுப்பயணமாக பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு கடந்த வெள்ளிக்கிழமை சென்றார். இந்த சுற்றுப்பயணத்தின் கடைசியாக ஒமன் நாட்டுக்கு நேற்று பிரதமர் மோடி சென்றார். சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் தற்போதுதான் அந்நாட்டுக்கு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அந்த நாட்டுக்கு சென்று இருந்தார். 

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஓமன் சுல்தானை சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே பாதுகாப்பு சுகாதாரம் மற்றும் சுற்றுலா உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு தொடர்பான 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. பிரதமர் நரேந்திர மோடி ஓமன் சுற்றுப்பயணத்தின்போது அந்நாட்டின் தலைநகரான மஸ்கட்டில் உள்ள சுல்தான் காபுஸ் விளையாட்டு வளாகத்தில் வெளிநாடு வாழ் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்தியா-ஒமன் வர்த்தக சந்திப்பில் நிகழ்ச்சியில் ஓமன் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து பேசினார். 

மஸ்கட்டில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று வழிப்பட்டார். மேலும் சுல்தானின் மிகப்பெரிய பள்ளிவாசலை பார்வையிட்டார். ஓமனின் துணை பிரதமர்கள் சயீத் பாகத் மற்றும் சயீத் ஆசாத் ஆகியோரை சந்தித்து மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். பாலஸ்தீனம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் சுற்றுப்பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்தியா வந்தடைவார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

New Shape Tailors




Johnson's Engineers




Friends Track CALL TAXI & CAB (P) LTD



crescentopticals



Thoothukudi Business Directory