» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்தியா செல்லும் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் : அமெரிக்கா அறிவுறுத்தல்

வியாழன் 11, ஜனவரி 2018 11:53:18 AM (IST)

இந்தியா செல்லும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தங்கள் நாட்டு பயணிகளுக்கு அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது.

ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என்று அமெரிக்கர்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. அதேவேளையில், இந்தியாவின் பிற பகுதிகளுக்கு சற்று எச்சரிக்கையுடன் பயணம் மேற்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது. அமெரிக்க சுற்றுலாப் பயணிகளுக்கான வழிகாட்டி அறிக்கையை அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதில் எந்தெந்த நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்தியாவை இரண்டாம் நிலை பயண நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா வரையறுத்துள்ளது. அதாவது, இந்தியாவில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வருவதாகவும், அங்கு செல்லும் அமெரிக்க சுற்றுலாப் பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அதன் வாயிலாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காஷ்மீருக்கும், இந்திய - பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்கும் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்று அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைப் பொருத்தவரை மூன்றாம் நிலை நாடுகள் பட்டியலில் வைத்துள்ள அமெரிக்கா, அங்கு பயணம் மேற்கொள்வது குறித்து மறுபரிசீலனை செய்வது அவசியம் எனக் கூறியுள்ளது. அதுமட்டுமன்றி 4-ஆம் நிலையில் உள்ள ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளக் கூடாது என்றும் தங்களது நாட்டு குடிமக்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Johnson's Engineers


Friends Track CALL TAXI & CAB (P) LTD




crescentopticals






Thoothukudi Business Directory