» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அமெரிக்க விமானத்தில் பேஸ்புக் நிறுவனரின் சகோதரிக்கு பாலியல் தொல்லை

சனி 2, டிசம்பர் 2017 4:30:38 PM (IST)

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரிக்கு அமெரிக்க விமானத்தில் பயணி ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பேஸ்புக் நிறுவனரான மார்க் ஸூகர்பெர்க்கின் சகோதரியும் பேஸ்புக் நிறுவனத்தின் முன்னாள் நிர்வாகியுமான ரண்டி ஸூகர்பெர்க் சமீபத்தில் தனக்கு விமானத்தில் நடந்த மோசமான அனுபவத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார். அத்துடன் சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திற்கும் புகார் கடிதம் அனுப்பி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இருந்து மெக்சிகோவின் மசட்லான் நகருக்கு அலாஸ்கா விமானத்தில் பயணம் செய்தேன். அப்போது என் இருக்கைக்கு அருகில் அமர்ந்து பயணம் செய்த நபர், என்னிடம் தகாத முறையில் நடந்துகொண்டார்.  குடிபோதையில் இருந்த அந்த நபர் பாலியல் தொடர்பாகவும் ஆபாசமாகவும் பேசியதுடன், விமானத்தில் இருந்த மற்ற பெண் பயணிகளின் அங்க அசைவு குறித்தும் வர்ணித்தார்.  இதுபற்றி விமான பணியாளர்களிடம் புகார் கூறினேன். ஆனால் அந்த நபர் வழக்கமாக அந்த வழித்தடத்தில் பயணம் செய்பவர் என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

தனிப்பட்ட முறையில் இதனை தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கூறியதுடன், எனது இருக்கையை பின்புறம் மாற்ற முன்வந்தனர். பாதிக்கப்பட்ட நான் ஏன் வேறு இருக்கைக்கு மாற வேண்டும்? இவ்வாறு அவர் கூறியிருந்தார். அவரது புகாரின் அடிப்படையில் விசாரணையை தொடங்கியிருப்பதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது. மேலும், புகார் குறித்து ரண்டி ஸூகர்பெர்க்கை தொடர்பு கொண்டு பேசியிருப்பதாகவும்,  விசாரணை அறிக்கை வெளிவரும் வரை குற்றம்சாட்டப்பட்ட நபரின் பயண சலுகைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.


மக்கள் கருத்து

NomanDec 7, 2017 - 05:03:06 PM | Posted IP 82.19*****

Ithu ella urlaum ullathu thaan.. athu illathavan 9.. ithukennanu melanaadu keelapaarinu.. poda loose...

உண்மைDec 6, 2017 - 01:43:11 PM | Posted IP 122.1*****

இப்போது புரிகிறதா மேலை நாட்டு கலாச்சாரம் பின்பற்றினால் இந்தியாவும் சீரழியும்!

உண்மைDec 6, 2017 - 01:37:28 PM | Posted IP 122.1*****

என்னடா இது? என்ன இருந்தாலும் பேரிக்காய் போல வருமா

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Friends Track CALL TAXI & CAB (P) LTD

New Shape Tailors

crescentopticalsJohnson's Engineers

Thoothukudi Business Directory