» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வட கொரியாவை தீவிரவாத ஆதரவு நாடாக அறிவித்தது அமெரிக்கா: அதிபர் டிரம்ப் அதிரடி!!

செவ்வாய் 21, நவம்பர் 2017 12:56:22 PM (IST)

வட கொரியாவை பயங்கரவாதத்தின் ஆதரவு நாடாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். 

வடகொரியா கொரிய தீபகற்பத்தில் அணுசக்தி அழுத்தங்களை அதிகரித்ததுடன், பயங்கரவாதத்திற்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறது என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். திங்களன்று அமெரிக்க அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதன் அணுசக்தி மற்றும் ஏவுகணைத் திட்டங்களுக்காக வடகொரியா மீது கூடுதல் தடைகளை விதிக்கநடவடிக்கை போகிறது. டிரம்ப் அமைஅச்சரவை கூட்டத்தின் போதை இட்ய்ஹனை அறிவித்தார். அவர் கூறியதாவது: இன்று, அமெரிக்கா வட கொரியாவை பயங்கரவாதத்தின் அரசு ஆதரவாளராக அறிவிக்கிறது. 

இது ஒரு நீண்ட காலத்திற்கு முன்பு நடந்திருக்க வேண்டும். இது தற்போது தான் நடந்து உள்ளது. அணு ஆயுத பேரழிவு மூலம் உலக அச்சுறுத்தலகா உள்ளது.வெளிநாட்டு மண்ணில் படுகொலைகள் உட்பட,வட கொரியா பலமுறை சர்வதேச பயங்கரவாத நடவடிக்கைகளை ஆதரித்துள்ளது. இன்று இந்த நடவடிக்கை எடுக்கும்போது,நமது எண்ணங்கள் ஓட்டோ வார்பீயர் குறித்து போகிறது. அவன் ஒரு அற்புதமான இளைஞன் வட கொரிய ஒடுக்கு முறையால் கொடூரமாக பாதிக்கப்பட்டான். வட கொரியா மற்றும் தொடர்புடையவர்கள் மீது இன்னும் கூடுதலான தடைகள் மற்றும் அபராதம் விதிக்கப்படும். கொலைகார ஆட்சியை தனிமைப்படுத்த அதிகபட்ச அழுத்தம்கொடுக்கப்படும்.

செவ்வாயன்று கருவூலத் துறை வட கொரியா மீது மிகப்பெரிய ஒரு கூடுதல் சுற்று தடைகளை அறிவிக்கும். வட கொரிய ஆட்சி சட்டபூர்வமானதாக இருக்க வேண்டும். வட தனது சட்டவிரோதமான அணுசக்தி மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணை அபிவிருத்தியை முடிவுக்கு கொண்டு, சர்வதேச பயங்கரவாதத்திற்கு அனைத்து ஆதரவையும் நிறுத்த வேண்டும். இல்லாவிடால் அடுத்த 2 வாரங்கள் பொருளாதார தடைகள் அதிக அளவில் இருக்கும். இவ்வாறு அவர் கூறினார். அமெரிக்க வெளியுறவுக் குழு இந்த நடவடிக்கையை வரவேற்று உள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

Johnson's Engineers


New Shape Tailors

Universal Tiles Bazar

selvam aqua

Nalam PasumaiyagamThoothukudi Business Directory