» செய்திகள் - விளையாட்டு » உலகம்

அடுத்தவருடம் ஆபத்து விளைவிக்கும் நிலநடுக்கங்கள் அதிகம் நிகழும் : அதிர்ச்சி தகவல்

திங்கள் 20, நவம்பர் 2017 8:18:27 PM (IST)

2018ம் ஆண்டில் உலகம் முழுவதும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய நிலநடுக்கங்கள் அதிக அளவில் நடக்கும் என ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

புவியின் சுழற்சி வேகம் குறைந்து வருவதால் ஏற்படும் நிலநடுக்கங்கள் குறித்து 1900ம் ஆண்டு முதல் ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கையில் கூறியிரு ப்பதாவது : 

ரிக்டர் அளவுகோலில் 7 என்ற அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் வழக்கமாக ஆண்டுக்கு 15 முதல் 20 முறை நிகழும். ஆனால் புவியின் சுழற்சியில் ஏற்பட்டுள்ள மாறுபாடு காரணமாக 2018 ல் சராசரியாக 25 முதல் 30 முறை பேரழிவை ஏற்படுத்தும் நிலநடுக்கங்கள் ஏற்படும்.

ஒவ்வொரு 5 ஆண்டுக்கு ஒருமுறை இது போன்ற புவி சுழற்சி வேகம் குறைந்து, 5 வது ஆண்டில் அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்கள் ஏற்படும்.2018 ம் ஆண்டில் துவங்க உள்ள அதிக அளவிலான பயங்கர நிலநடுக்கங்களுக்கான புவியின் சுழற்சி வேக குறைவு 4 ஆண்டுகளுக்கு முன்பே துவங்கி விட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Annai Jewellers

Sponsored Ads

selvam aqua

New Shape Tailors

Universal Tiles Bazar

Johnson's Engineers





Nalam Pasumaiyagam




Thoothukudi Business Directory