» செய்திகள் - விளையாட்டு » உலகம்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹலீமா யாகோப் சிங்கப்பூரின் முதல் பெண் அதிபராக தேர்வு

வியாழன் 14, செப்டம்பர் 2017 10:20:20 AM (IST)

இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹலீமா யாகோப், சிங்கப்பூரின் 8வது மற்றும் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பை பெறுகிறார். 

சிங்கப்பூரின் அதிபராக இருந்து வந்த டோனி டான் கெங் யாம், பதவிக்காலம் கடந்த மாதம் 31–ந் தேதி முடிந்தது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், வரும் 23–ந் தேதி நடத்தப்படும்; வேட்பு மனு தாக்கல் 13–ந் தேதி (நேற்று) நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேர்தலில் பாராளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஹலிமா யாக்கோப் (63) உள்ளிட்ட 5 பேர் போட்டியிடுவர் என தகவல்கள் வெளியாகி வந்தன.

ஆனால் சிங்கப்பூர் சட்டப்படி ஹலிமா தவிர்த்து மற்ற 4 பேரும் போட்டியிடுவதற்கான தகுதியை பெற வில்லை. இந்த நிலையில் ஹலிமா மட்டுமே அதிபர் தேர்தலுக்கு போட்டியிட தகுதி பெற்றார். நேற்று அவர் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். வேட்புமனு தாக்கலுக்கான நேரம் முடிந்த பிறகு, அவர் முறைப்படி சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி அறிவித்தார். ஹலிமா, சிங்கப்பூரின் எட்டாவது அதிபர் மற்றும் முதல் பெண் அதிபர் என்ற சிறப்பை பெறுகிறார். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். 

இவர் ஆளும் பி.ஏ.பி. கட்சியை சார்ந்திருந்து, பாராளுமன்ற உறுப்பினர், சபாநாயகர் பதவிகளை வகித்து வந்தார். அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்காக இந்த பதவிகளை விட்டு விலகினார். பி.ஏ.பி. கட்சியில் இருந்தும் ராஜினாமா செய்தார்.நேற்று அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு ஹலிமா, தேர்தல் அலுவலகத்தில் வைத்து பேசும்போது, ‘‘ நான் நாட்டு மக்கள் அனைவருக்கும் அதிபராக இருப்பேன்’’ என்று வாக்குறுதி அளித்தார்.


மக்கள் கருத்து

MavlesSep 18, 2017 - 03:03:28 AM | Posted IP 41.79*****

வாழ்த்துக்கள்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Universal Tiles Bazar

New Shape Tailors

Johnson's Engineers

Pop Up Here

Nalam Pasumaiyagam

CSC Computer Education


selvam aqua



Thoothukudi Business Directory