» செய்திகள் - விளையாட்டு » உலகம்

விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு எதிரான பாலியல் புகார் விசாரணையை கைவிட சுவீடன் முடிவு

வெள்ளி 19, மே 2017 5:40:58 PM (IST)

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார புகார் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக சுவீடன் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

சுவீடன் அரசு வழக்கறிஞர்கள் குழு இயக்குனர் மெரியான்ன்னி நை ஜூலியன் அசாஞ்சேவுக்கு எதிரான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணையை கைவிடப்போவதாக கூறினார். இந்த அறிவிப்பின் மூலம் 7 ஆண்டுகால சட்ட இழுபறி நிலை முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க வெளியுறவுக் கொள்கை உள்ளிட்ட பல முக்கிய ரகசிய ஆவணங்களை அசாஞ்சே வெளியிட்டதையடுத்து அவர் மீது பலவிதமான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. 45 வயதாகும் அசாஞ்சே 2012ம் ஆண்டு முதல் அரசியல் புகலிடம் வழங்கப்பட்டு லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் இருந்து வருகிறார்.

பாலியல் பலாத்காரக் குற்றச்சாட்டில் தன்னை சுவீடனுக்கு நாடுகடத்தும் முயற்சியைத் தடுக்க அவர் ஈக்வடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். மூன்று பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களை எதிர்கொண்டு வந்த அசாஞ்சே அனைத்தையும் மறுத்து வந்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Universal Tiles Bazar

New Shape Tailors

Johnson's Engineers



selvam aqua



Pop Up Here

CSC Computer Education


Nalam Pasumaiyagam

Black Forest Cakes



Thoothukudi Business Directory