» செய்திகள் - விளையாட்டு » உலகம்

ஈரான் அதிபர் தேர்தலில் பெண்களின் வேட்புமனுக்கள் நிராகரிப்பு : 1997முதல் தொடர்கதை

வியாழன் 18, மே 2017 8:52:06 PM (IST)

ஈரான் அதிபர் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில்,அதிபர் வேட்பாளருக்கு போட்டியிட பதிவு செய்திருந்த அனைத்து பெண்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது.

மேற்காசியாவில் உள்ள மிகவும் முக்கியமான நாடு ஈரான். தற்போது அதிபராக உள்ள ஹாசன் ருஹானி பதவிக் காலம் முடிவடைவதை அடுத்து கடந்த ஏப்ரல் மாதம் அதிபர் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அறிவிப்பினை தொடர்ந்து தேர்தலுக்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வந்தது.

பிரச்சாரங்கள் முடிவடைந்த நிலையில் மிகுந்த பரபரப்புக்கு இடையே ஈரானில் நாளை அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. ஈரான் மக்கள் தங்கள் நாட்டின் 8-வது அதிபரை தேர்ந்தெடுக்க உள்ளனர்.அதிபர் தேர்தலோடு சேர்த்து உள்ளாட்சி தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் சுமார் 1636 பேர் பதிவு செய்து இருந்தது. இதில் 137 பேர் பெண்கள். 1499 பேர் ஆண்கள். பதிவு செய்த 1636 வேட்பாளர்களில் 4 பேருக்கு மட்டும் ஒப்புதல் வழங்கப்பட்டது. இருப்பினும் அதில் இருந்து இருவர் பின்வாங்கி விட்டனர். இறுதியாக தற்போதைய அதிபர் ருஹானி உள்ளிட்ட இருவர் மட்டும் களத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அதிபர் வேட்பாளருக்கு போட்டியிட பதிவு செய்திருந்த 137 பெண்களின் மனுக்களும் நிராகரிக்கப்பட்டது. இதனால் இந்த முறையும் அதிபர் பதவிக்கு போட்டியிட பெண்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. 73 வயதான அசாம் தலெகானி என்ற பெண்மணி கூறுகையில், தன்னுடைய மனு இந்த ஆண்டோடு சேர்த்து 4-வதுமுறை நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

ஈரானின் கார்டியன் கவுன்சில் தான் மிகவும் அதிகாரமிக்க அரசியல் சபை ஆகும். இது ஈரான் பாராளுமன்றத்தின் மேல் சபை ஆகும். இந்த சபையில் மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். அனைவரும் ஆண்கள். இந்த கவுன்சிலில் போட்டியில் பெண்களுக்கு தடை நிலவி வருகின்றது.

இருப்பினும், பெண் வேட்பாளர்கள் இந்த தேர்தலில் அதிபர் பதவிக்கு போட்டியிடலாம் என்று கார்டியன் கவுன்சில் அறிவித்து இருந்தது. 1997-ம் ஆண்டு முதல் பெண்கள் அதிபர் தேர்தலுக்கு போட்டியிட‌ முயன்று வருகின்றனர். ஆனால் தொடர்ச்சியாக அவர்களது விருப்ப மனுக்கள் ஒவ்வொரு முறையும் நிராகரிக்கப்பட்டு வருகிறது. பெண்களின் மனுக்களை நிராகரித்ததற்கு எந்தவொரு விளக்கமும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

New Shape Tailors


CSC Computer Education


selvam aqua

Sterlite Industries (I) Ltd

Johnson's Engineers


Nalam Pasumaiyagam


Universal Tiles Bazar



Thoothukudi Business Directory