» செய்திகள் - விளையாட்டு » உலகம்

வியட்நாமுக்கு ஏவுகணைகள் வழங்கினால் கைகட்டி வேடிக்கைப் பார்க்கமாட்டோம்: சீனா எச்சரிக்கை

வியாழன் 12, ஜனவரி 2017 11:28:55 AM (IST)

வியட்நாமுக்கு இந்தியா ஏவுகணைகள் விற்பனை செய்வதை கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம் என்று சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது.

கம்போடியா விவகாரத்தில் வியட்நாம் தலையிட்ட காரணத்தினால், அந்நாட்டுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 1979-ஆம் ஆண்டு போர் நடைபெற்றது. அதன்பிறகு இரு நாடுகளுக்கு இடையே அமைதி நிலவியபோதும், தென் சீனக் கடல் பகுதி தொடர்பாக இரு நாடுகளுக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது.

இதனிடையே, வியட்நாமுக்கு தரையில் இருந்து பாய்ந்து சென்று வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் ஆகாஷ் ரக ஏவுகணைகளை இந்தியா விற்பனை செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானின் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்புத் தலைவர் மசூத் அஸாருக்கு எதிராக ஐ.நா. மூலம் இந்தியா நடவடிக்கை எடுக்க முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்கு பாகிஸ்தானின் நட்பு நாடான சீனா முட்டுக்கட்டை போடுவதால், அதற்குப் பதிலடியாக வியட்நாமுக்கு இந்தியா ஏவுகணை வழங்க இருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்தன.

இந்நிலையில், சீன அரசுக்குச் சொந்தமான "குளோபல் டைம்ஸ் பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது: சீனாவுக்கு எதிராக பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடனோ அல்லது பாதுகாப்பு காரணங்களுக்காக வியட்நாம் நாட்டுடன் ராணுவ உறவை இந்திய அரசு மேம்படுத்தினாலோ இப்பிராந்தியத்தில் அமைதிக்கு பாதிப்பையே ஏற்படுத்தும். இதைக் கண்டு, சீனா தனது கைகளை கட்டிக் கொண்டு வேடிக்கைப் பார்க்காது.

ஆசியான் அமைப்பின் மிகவும் முக்கிய உறுப்பு நாடாகவும், இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையின் முக்கியத் தூணாகவும் விளங்கும் வியட்நாமுடன் ராணுவ உறவை இந்தியா அதிகரிப்பது எங்களுக்குப் பிரச்னை அல்ல. ஆனால், அத்தகைய உறவானது, அமைதி மற்றும் இப்பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துபவையாக இருக்க வேண்டும். மாறாக, பிரச்னைகள் அல்லது பிற நாடுகள் இடையே மோதல்களை ஏற்படுத்துபவையாக இருக்கக் கூடாது. உலக சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்ற கனவில் இந்தியா உள்ளது. 

ஆனால், தற்போதைய சர்வதேச சூழ்நிலையில், அதை இந்தியா தனிப்பட்ட நாடாக இருந்து சாதிப்பது மிகவும் கடினமாகும். ஆதலால், பிற நாடுகளுடன் இந்தியா ஆக்கப்பூர்வமான ஒத்துழைப்பை ஏற்படுத்திக் கொள்வது அவசியமாகும் என்று அந்த தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியட்நாமுக்கும் எச்சரிக்கை: இதேபோல், அதே பத்திரிகையில் வெளியாகியுள்ள மற்றோர் கட்டுரையில், வியட்நாமுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ளும்படி வியட்நாமுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Johnson's Engineers

Nalam Pasumaiyagam



CSC Computer Education

Universal Tiles Bazar

New Shape Tailors


selvam aqua

Sterlite Industries (I) Ltd




Thoothukudi Business Directory