» செய்திகள் » இந்தியா
Share
அடுத்த மூன்று ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி
செவ்வாய் 27, ஜூலை 2010 11:00:34 AM (IST)
அடுத்த மூன்று ஆண்டுகளில், நம் நாட்டில் சூரிய சக்தி மூலம் 1,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மத்திய மின்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். இதில் 500 மெகா வாட் சூரிய வெப்பத்தின் வாயிலாகவும், மற்றொரு 500 மெகா வாட் சூரிய ஒளி வாயிலாகவும் பெறப்படும் என அவர் கூறினார்.
மத்திய அரசுக்கு சொந்தமான பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் ஆகிய நிறுவனங்கள் மின் உற்பத்தி திட்டங்களுக்கு தேவையான நிதி உதவி வழங்கி வருகின்றன. ரூரல் எலக்ட்ரிஃபிகேஷன் கார்ப்பரேஷன் கிராமப்புறங்களில் அமைக்கப்படும் மின் உற்பத்தி திட்டங்களுக்கு கடன் வசதி அளித்து வருகிறது. இந்த இரண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் 2013-ஆம் ஆண்டுக்குள் 1,000 மெகா வாட் சூரிய மின் சக்தி உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஜவஹர்லால் நேரு தேசிய சூரிய சக்தி திட்டத்தின் கீழ் இந்த நிறுவனங்கள் நிதி உதவி வழங்க உள்ளன. இத்திட்டத்தின் வாயிலாக, அடுத்த 12 ஆண்டுகளில் சூரிய சக்தி மூலம் 20,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணி மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்படும். 2013-ஆம் ஆண்டு வரை முதல் கட்டமும், 2017-ஆம் ஆண்டு வரை இரண்டாவது கட்டமும், 2022-ஆம் ஆண்டு வரை மூன்றாவது கட்டமும் செயல்படுத்தப்பட உள்ளன.
தற்போது நம் நாட்டில் ஆண்டுக்கு 5 மெகா வாட்டுக்கும் குறைவான அளவில்தான் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஐந்தாண்டு திட்டங்கள் பத்தாவது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2002-2007) அனைத்து திட்டங்கள் வாயிலாக கூடுதலாக 42,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது.
ஆனால் இதில் 50 சதவீதமே (21,000 மெகா வாட்) எட்டப்பட்டது. நடப்பு ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2007-2012) நாட்டின் மொத்த மின் உற்பத்தி உற்பத்தி திறனை மேலும் 62,000 மெகா வாட் அளவிற்கு உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. ஆனால், கூடுதலாக 55,000 மெகா வாட் அளவிற்கே மின் உற்பத்தி திறனை அதிகரிக்க முடியும் என்ற நிலை உள்ளது என மத்திய மின்சார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எதிர்வரும் 12-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் (2012-2017) கூடுதலாக 78,700 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் தொடரும் செய்திகள்

விமானப்படையின் கெளரவ கேப்டனாக சச்சின் டெண்டுல்கர் நியமனம்
சனி 4, செப்டம்பர் 2010 1:07:38 PM (IST)

எந்திரனுக்காக காத்திருக்கும் பாலிவுட் சூப்பர் ஸ்டார்
வெள்ளி 3, செப்டம்பர் 2010 9:35:46 PM (IST)

இந்தியர்களை புக்கிகள் அணுகியதில்லை: சச்சின்
வெள்ளி 3, செப்டம்பர் 2010 6:35:57 PM (IST)

மாவோயிஸ்டுகள் கடத்தலில் திருப்பம்: வேறொரு போலீஸ் அதிகாரி உடல் மீட்பு
வெள்ளி 3, செப்டம்பர் 2010 4:37:57 PM (IST)

ரக்த சரித்ராவுக்கு மீண்டுமொரு சிக்கல்: ராம் கோபால் வர்மாவுக்கு வக்கீல் நோட்டீஸ்!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 1:37:10 PM (IST)

நாளுக்கு நாள் அதிகரிக்கும் பக்தர்கள்: ஆந்திரா பட்ஜெட்டில் பாதி திருப்பதி கோவில் வருமானம்!
வெள்ளி 3, செப்டம்பர் 2010 11:15:12 AM (IST)

நக்சல்கள் விதித்த கெடு முடிந்தது: கடத்தப்பட்ட 4 ஒரு போலீஸ்காரர்களில் ஒருவர் கொலை
வியாழன் 2, செப்டம்பர் 2010 9:21:15 PM (IST)

கன்னியாஸ்திரிகளுக்கு “செக்ஸ்” கொடுமை: பாதிரியார் புத்தகத்தால் கேரளாவில் சர்ச்சை!
வியாழன் 2, செப்டம்பர் 2010 12:00:47 PM (IST)

பொது இடத்தில் புகை பிடித்த நடிகர் அஜய் தேவ்கனுக்கு அபராதம்
வியாழன் 2, செப்டம்பர் 2010 11:56:20 AM (IST)

சித்தா ஆயுர்வேதா மருந்துகளுக்கு வரி விலக்கு: பாராளுமன்றத்தில் தூத்துக்குடி எம்.பி. கோரிக்கை!
புதன் 1, செப்டம்பர் 2010 3:11:05 PM (IST)

41 எம்பிக்கள் அடிக்கடி ஆப்சென்ட்.. 100பேர் வெறும் ‘கொட்டாவி’... பார்லிமென்ட் பரபரப்பு தகவல்கள்
புதன் 1, செப்டம்பர் 2010 12:43:10 PM (IST)

புதுமண தம்பதிகளுக்கு அரசு செலவில் ஹனிமூன்!
புதன் 1, செப்டம்பர் 2010 12:30:45 PM (IST)

